15 சிறுமியின் வாழ்க்கையில் விளையாடிய வெளிநாட்டு ஊழியருக்கு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறுமி டேட்டிங் செய்ய ஒப்புக்கொண்ட பிறகு, ஹேவ்லாக்கில் உள்ள ஹோட்டலில் வைத்து அவர் சிறுமியை நாச ம் செய்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஜாலான் பெசார் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிரடி சோதனை: 932 பேர் கைது
ருவன் என்ற அந்த ஊழியர், சலூன் கடையில் பணிபுரிந்தார், பாதிக்கப்பட்ட சிறுமி அவரது வாடிக்கையாளர்களில் ஒருவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்தபோது ருவனுக்கு வயது 25.
இந்நிலையில், அவர் மூன்று பாலியல் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாகவும், ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்க தடை உத்தரவு இருக்கும் காரணமாக, சிறுமியின் விவரங்கள் குறித்த எந்த தகவலையும் வெளியிட முடியாது.
என்ன நடந்தது?
நீதிமன்ற ஆவணங்களின்படி; 2024 ஜனவரியில், சிறுமி ஆன்லைனில் முடி திருத்தம் சேவைகளுக்கான விளம்பரத்தைக் கண்டார்.
அப்போது அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை சிறுமி தொடர்பு கொண்டார், அது ருவன் கைபேசி எண் என்று சொல்லப்பட்டுள்ளது.
ருவன் எண்ணை save செய்த சிறுமி அவரின் கடைக்கு அப்போது செல்லவில்லை. பின்னர் 5 மாதம் கழித்து அந்த சலூன் கடைக்கும் சென்றுள்ளார்.
அப்போது ருவான் சிறுமிக்கு முடி அலங்காரம் மேற்கொண்டார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு: துணைபோலிஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி.. செக் வைத்த போலீஸ்
சிறுமியை தொடர்புகொண்ட ஊழியர்
பின்னர் சிறுமி சலூனை விட்டு சென்றதும், ருவானிடமிருந்து சிறுமிக்கு குறுஞ்செய்தி வந்தது, அதில் தன்னுடனும் அவனது நண்பர்களுடனும் விளையாட வருமாறு அவர் கூறினார் என சொல்லப்பட்டுள்ளது.
அதனை ஒப்புக்கொண்ட சிறுமி, சில நாட்களுக்குப் பிறகு ருவனை சந்தித்தார். அந்த சந்திப்பைத் தொடர்ந்து, ருவான் ஒவ்வொரு நாளும் சிறுமியிடம் தொடர்பு கொண்டு பேசிவந்துள்ளார்.
டேட்டிங்
இருவரும் 2024 ஜூன் 15, அன்று டேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், தனக்கு 15 வயதுதான் ஆகிறது என்பதை சிறுமி ருவனிடம் தெளிவுபடுத்தினார், மேலும் தகாத முறையில் தன்னைத் தொட கூடாது என்றும் அதில் விருப்பம் இல்லை என்பதையும் சிறுமி தெளிவுப்படுத்தி கூறியுள்ளார்.
அதனை ருவனும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஹோட்டல் அறையில்…
ஒரு நாள், தான் ஒரு ஹோட்டல் அறையை முன்பதிவு செய்துள்ளதாகவும், தன்னுடன் கால்பந்து போட்டியைக் காண அங்கு வருமாறும் ருவன் சிறுமியை அழைத்ததாக கூறப்பட்டுள்ளது.
அப்போது நள்ளிரவு நேரத்தில், சிறுமியிடம் நெருங்கி முத்தமிடத் தொடங்கியதாகவும், பின்னர் இருவரும் ஒன்றாக இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அதோடு விடாமல், மீண்டும் இருவரும் சந்தித்து ஒன்றாக இருந்துள்ளனர். ருவன், ஒரே இரவில் பல முறை உறவுக்கு அழைத்ததாகவும் ஆனால் அதற்கு சிறுமி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுமியை புறக்கணித்த ஊழியர்
இதனால், சிறுமியின் மெசேஜ்களை ருவான் புறக்கணிக்கத் தொடங்கினார், இருவருக்கும் ஜூலை 22 அன்று பிரேக் அப் ஆனதாக சொல்லப்பட்டுள்ளது.
பிரிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிறுமி ருவனுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தார்.
பின்னர் 2024 ஜூலை 25, அன்று ருவன் கைது செய்யப்பட்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் கருத்து
பாதிக்கப்பட்ட சிறுமியை டேட்டிங் என்று ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற ருவான், சிறுமியை நாசம் செய்ததாகவும், பின்னர் தன்னுடன் உறவு கொள்ள சிறுமி மறுத்ததால் பிரிந்ததாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், அவருக்கு 16 மாத சிறைத்தண்டனை விதித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர் சீனாவை சேர்ந்தவர் என்றும் தகவல் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்புடையவை…
சிங்கப்பூரில் 23 வயது வெளிநாட்டு ஊழியர் மரணம்: சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட உடல்

