ஜோகூர் பாரு:
ஜாலான் வாஜா 5, தாமான் பாண்டான் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில், 25 ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு இருசக்கர வண்டி பழுது பார்க்கும் கடை உட்பட எட்டுக் கடைகள் அழிந்தன.
வாகனம் பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளர், 60 வயதான வோங் கூறுகையில்க், “மாலை 3.30 மணிக்கு நான் வேலைத்தளத்தை விட்டு வெளியேறினேன். சிறிது நேரத்துக்குள் ஒருவன் எனக்குத் தொலைபேசியில் தீ பற்றிய தகவலை தெரிவித்தான். நான் வந்தபோது தீ வெகுவாக பரவியிருந்தது. எதையும் காப்பாற்ற முடியவில்லை,” என கூறினார். மேலும், “மூன்று வாடிக்கையாளர்களின் மோட்டார்சைக்கிள்களும் தீயில் சிக்கி அழிந்துவிட்டன,” என்றார்.
“எல்லாமே போய்விட்டது. இந்த பழுதுபார்க்கும் கடையை 25 ஆண்டுகளாக நடத்தி வந்தேன். இதனால் நான் மிகுந்த துயரமடைந்துள்ளேன்,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கட் அதிகாரி முஹம்மட் ஷாஹிர் இக்வான் முகமட் ஷொயிப் தெரிவித்ததாவது: “ஐந்து கடைகள் 90 சதவீதம், இரண்டு கடைகள் 70 சதவீதம், மற்றும் ஒரு கடை 50 சதவீதம் தீவயினால் சேதமடைந்தன. மேலும் ஒரு ப்ரோட்டோன் வீரா மற்றும் இரண்டு ப்ரோட்டோன் சாகா கார்களும் தீயில் அழிந்தன,” என்றார்.




