மாபெரும் வெற்றியை நோக்கி ஓரணியில் தமிழ்நாடு பயணம்
ஒரே வாரத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை கடந்திருப்பது குறித்து கட்சியனருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். இதுதொடர்பாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவில், “50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது! இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!

