• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.1700 கோடி தருவதாக ரூ.25 கோடியை ஏமாற்றிய நபர்… பெண் கொடுத்த பரபரப்பு புகார்.. என்ன நடந்தது?

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ரூ.1700 கோடி தருவதாக ரூ.25 கோடியை ஏமாற்றிய நபர்… பெண் கொடுத்த பரபரப்பு புகார்.. என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 09, 2025 5:36 PM IST

சிவப்பிரசாத் என்பவர் 50 வயது விதவை நாகமணியை திருமணம் செய்து, 25 கோடி ரூபாய் சொத்துகளை சுருட்டி கொண்டு தலைமறைவு ஆனார்.

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

1700 கோடி ரூபாய் சொத்து தனக்கு சொந்தமாக உள்ளது என்று கூறி முப்பது கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான 50 வயது விதவையை திருமணம் செய்து மொத்த சொத்தையும் சுருட்டி கொண்டு ஓட்டம் பிடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராஜூபேட்டா கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி(50). இவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரை சேர்ந்த வெங்கடப்பா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒரு மகன் இருந்தார். 15 ஆண்டுகளுக்கு முன் அவர்களுடைய மகன் சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்ட நிலையில் அதன்பின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வெங்கடப்பாவும் மரணமடைந்து விட்டார்.

இதனிடையே, மகன், கணவன் ஆகியோர் மரணம் அடைந்துவிட்ட காரணத்தால் தனி மரமாக வசித்து வந்தார் நாகமணி. நாகமணிக்கு சித்தூரை சேர்ந்த திருமண புரோக்கர் மூலம் பங்காரு பாளையத்தை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் அறிமுகமானார்.

நீ தனியாக வசித்து சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. எனவே கொரோனாவில் மகளையும் மனைவியையும் பறிகொடுத்த உன்னை நான் மணந்து கொள்கிறேன். இரண்டு பேரும் சந்தோஷமாக வாழலாம் என்று கூறினார் சிவப்பிரசாத். அவருடைய பேச்சை உண்மை என்று நம்பிய நாகமணி சிவப்பிரசாத்தை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஏதேதோ காரணங்களை கூறி நாகமணியின் வங்கி கணக்கில் இருந்து மூன்று கோடி ரூபாய் பணத்தை சிவப்பிரசாத் தன்னுடைய அண்ணன், அண்ணி ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டார். அதன்பின் தனக்கு 1700 கோடி ரூபாய் வரவேண்டிய பணம் உள்ளது. அந்த பணத்தைப் பெற 15 கோடி ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி நாகமணியை நம்ப செய்த சிவபிரசாத், சித்தூர் அருகே நாகமணிக்கு சொந்தமாக இருந்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், பெங்களூரில் நாகமணிக்கு சொந்தமாக இருந்த 15 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஆகியவற்றை விற்பனை செய்ய வைத்து அந்த பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவு ஆகிவிட்டார்.

இதையும் படிங்க: “நான் சைபர் கிரைம் போலீஸ்..” வடிவேலு பட பாணியில் நூதன திருட்டு.. போலீஸ் ஸ்டேஷனை பார்த்து எஸ்கேப் ஆன திருடன்!

இதனைத்தொடர்ந்து தன்னிடம் இருந்து சுமார் 25 கோடி ரூபாய் பணத்தை அபகரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சிவபிரசாத், மனைவி குழந்தைகள் ஆகியோருடன் பங்காரு பாளையத்தில் சந்தோசமாக வாழ்வதை அறிந்த நாகமணி தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து நேற்று மனுநீதி நாளில் சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். நாகமணி அளித்த புகாரை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 09, 2025 5:36 PM IST

Read More

Previous Post

ஜனாதிபதி அநுரவின் பெயரை தவறாக பயன்படுத்திய ட்ரம்ப் :சமூக ஊடகங்களில் வைரல்

Next Post

ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி @ Club WC | PSG beat Real Madrid to reach fifa Club World cup final

Next Post
ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி @ Club WC | PSG beat Real Madrid to reach fifa Club World cup final

ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி @ Club WC | PSG beat Real Madrid to reach fifa Club World cup final

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin