Last Updated:
Rajasthan Jet Crash | ராஜஸ்தானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவர் உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம், கரு மாவட்டத்தில் உள்ள பனோடா கிராமத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் விமானம் விழுந்து விபத்திற்குள்ளானது. வான்வெளியில் தடுமாறியபடி பறந்த விமானம், வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதைத் தொடர்ந்து, நொறுங்கிய விமான பாகங்களுக்கு அருகே பயிற்சி விமானியின் உடல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே விமான விபத்திற்கான காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
July 09, 2025 3:17 PM IST
Jet Crash | வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானம் : விமானிகள் உயிரிழப்பு


