குடும்ப ஆட்சி மற்றும் மன்னராட்சி குற்றச்சாட்டு
திமுகவை “குடும்ப ஆட்சி” மற்றும் “மன்னராட்சி” என்று விமர்சித்த எடப்பாடி, “இந்தியாவில் ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே. திமுகவில் இருந்தால், நான் பொதுச் செயலாளராகவோ, முதலமைச்சராகவோ இருக்க முடியுமா? அவர்களது கட்சியில் கப்பம் கட்டினால்தான் மந்திரியாகவோ, மாவட்டப் பொறுப்பாளராகவோ இருக்க முடியும்,” என்று கூறினார். மேலும், திமுகவின் மாவட்டப் பொறுப்பாளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் பதவியை இழந்ததை சுட்டிக்காட்டி, அவர்கள் மக்களுக்கு எவ்வாறு நன்மை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

