Last Updated:
நாய் கடித்தால் 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும், இல்லையெனில் ராபீஸ் தொற்று மரணத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நாய் கடித்தால் 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் மரணம் தான் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில் நாடு முழுவதும் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ப்ரோ கபடி லீக் தொடரில் விளையாடி வந்த பிரிஜேஷ் சமீபத்தில் நாய் கடித்து ராபீஸ் தொற்றுக்கு ஆளாகி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாய் கடித்தால் உடனடியாக காயம் ஏற்பட்ட பகுதியை சுமார் 15 நிமிடங்களுக்கு நீரை ஊற்றி கழுவ வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நாய் கடித்த 72 மணி நேரத்திற்குள் அதற்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால், நாயின் எச்சிலில் உள்ள ராபிஸ் தொற்று நரம்பு மண்டலத்தை பாதித்துவிடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காய்ச்சல், உடல் சோர்வு, நாய் கடித்த இடத்தில் உணர்வு மாறுதல் உள்ளிட்டவை ராபீஸ் தொற்று தாக்குதலின் முதல்கட்ட அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரேபிஸ் வைரஸ் நியூரான்களைத் தாக்கத் தொடங்கிய பிறகு, அமைதியின்மை, பிரமைகள், நீர் வெறுப்பு, எச்சில் வடிதல், விழுங்குவதில் சிரமம், ஆக்ரோஷம், கோமா மற்றும் பக்கவாதம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த அறிகுறிகள் ஒரு வாரத்திலோ, மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திற்கு பிறகோ கூட ஏற்படலாம் என்று கூறும் மருத்துவர்கள் நாய்கள் மட்டுமின்றி பூனை கடியால் கூட ராபிஸ் தொற்று ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர
July 09, 2025 12:50 PM IST


