• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் | US President Trump says trade deal with India will be signed soon

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் | US President Trump says trade deal with India will be signed soon
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: இந்​தி​யாவுடன் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடுகளுக்​கான வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்​ரலில் வெளியிட்​டார்.

இதனால் உலகம் முழு​வதும் பொருளா​தார மந்​தநிலை ஏற்​பட்​டது. அமெரிக்கா உட்பட பல்​வேறு நாடு​களின் பங்​குச் சந்​தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக அமெரிக்க அரசின் வரி விதிப்பு திட்​டம் ஜூலை 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் தற்​போது ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்டு உள்​ளது.

இந்த சூழலில் 14 நாடு​களுக்​கான புதிய வரி விகிதங்​களை அமெரிக்க அரசு நேற்று வெளி​யிட்​டது. இதன்​படி ஜப்​பானுக்கு 25%, தென்​கொரி​யா​வுக்கு 25%, தாய்​லாந்​துக்கு 36%, மலேசி​யா​வுக்கு 25%, இந்​தோ​னேசி​யா​வுக்கு 32%, தென்​ஆப்​பிரிக்கா​வுக்கு 30%, கம்​போடி​யா​வுக்கு 36%, வங்​கதேசத்​துக்கு 35%, கஜகஸ்​தானுக்கு 25%, துனிசி​யா​வுக்கு 25%, செர்​பி​யா​வுக்கு 35%, லாவோஸுக்கு 40%, மியான்​மருக்கு 40%, போஸ்​னி​யா​வுக்கு 30% வரி விதிக்​கப்​பட்டு உள்​ளது.

இந்த பட்​டியலில் இந்​தியா இடம்​பெற​வில்​லை. அமெரிக்க அரசு கடந்த ஏப்​ரலில் வெளி​யிட்ட அறி​விப்​பின்​போது இந்​தியா மீது 26 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நிறுத்தி வைக்​கப்​பட்​டிருக்​கிறது.

இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்​டனில் நேற்று முன்​தினம் கூறும்​போது, “பிரிட்​டன், சீனா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. அடுத்​த​தாக இந்​தி​யா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த இறு​திக் கட்​டத்தை நெருங்கி உள்​ளோம். விரை​வில் இரு நாடு​களிடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்” என்று தெரி​வித்​தார்.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தத்தை இறுதி செய்​வது தொடர்​பாக வாஷிங்​டனில் இரு நாடு​களின் மூத்த அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

ஆகஸ்ட் 1-ம் தேதிக்​குள் இரு நாடு​களிடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மரபணு மாற்​றம் செய்​யப்​பட்ட தானி​யங்​கள், பால் பொருட்​களை இந்​தி​யா​வில் விற்​பனை செய்ய அமெரிக்கா விரும்​பு​கிறது. இதை இந்​தியா ஏற்​க​வில்​லை.

இரு நாடு​கள் இடையே சுமுக​மான முறை​யில் வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​பட்​டால் இந்​தி​யா​வில் இருந்து ஜவுளி, மருந்​து, நகைகள் அமெரிக்கா​வுக்கு அதிக அளவில் ஏற்​றும​தி​யாக வாய்ப்​பிருக்​கிறது. இதே​போல அமெரிக்​கா​வில் இருந்து கார்​கள் உள்​ளிட்ட வாகனங்​கள் இந்​தி​யா​வுக்கு அதிக அளவில் ஏற்​றுமதி செய்​யப்பட வாய்ப்​பிருக்​கிறது. இவ்​வாறு மத்​தி​ய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்துள்​ளன.



Read More

Previous Post

தங்கம் விலை: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

Next Post

குடும்பத்திற்கு தெரியாமல் மலேசியா வந்த பிரிட்டிஷ் மாணவன் மாயம் | Makkal Osai

Next Post
குடும்பத்திற்கு தெரியாமல் மலேசியா வந்த பிரிட்டிஷ் மாணவன் மாயம் | Makkal Osai

குடும்பத்திற்கு தெரியாமல் மலேசியா வந்த பிரிட்டிஷ் மாணவன் மாயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin