• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதுச்சேரி ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமிக்கு கருத்து வேறுபாடு? – சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தில் வெடித்த மோதல்

GenevaTimes by GenevaTimes
July 8, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
புதுச்சேரி ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமிக்கு கருத்து வேறுபாடு? – சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தில் வெடித்த மோதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 08, 2025 10:17 PM IST

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் ஆளுநர் கைலாஷ் நாதன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

News18News18
News18

புதுச்சேரி யூனியன் பிரதேச சுகாதாரத்துறை இயக்குநரை நியமிப்பதில் முதலமைச்சர் என். ரங்கசாமிக்கும், ஆளுநர் கைலாஷ் நாதனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பதே ரங்கசாமியின் முதன்மை கருத்தாக இருந்து வருகிறது. இந்நிலையில், அது தற்போது ஆளுநருக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சனையாகவே உருவெடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேச சுகாதாரத்துறை இயக்குநராக நியமிக்க முதலமைச்சர் ரங்கசாமி ஒருவரின் பெயரை ஆளுநர் கைலாஷ் நாதனுக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால், ஆளுநர் அந்த நபருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமித்துள்ளார். இதற்கான ஆணையம் வெளிவந்துள்ளது.

இந்த ஆணை வந்ததும், முதலமைச்சர் ரangசாமி, தனக்கு தெரியாமல் இப்படி ஒரு ஆணை வருவதற்கு என்ன காரணம்? நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும்போது எனக்கு தெரியாமல் ஆளுநர் அந்தத் துறையில் ஒருவரை நியமிக்கிறார் என்றால், நான் எதற்கு அந்தப் பதவியில் இருக்க வேண்டும் என பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இன்று ஆளுநருடன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியையும் முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார்.

இது குறித்து விவரம் அறிந்ததும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேரடியாக முதலமைச்சர் வீட்டிற்கு சென்று சுமார் 45 நிமிடங்கள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, நமச்சிவாயம் ஆளுநர் மாளிகை சென்று அங்கு ஆளுநர் கைலாஷ் நாதனுடன் பேசினார். ஆனால், இந்தச் சமாதான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் மட்டுமின்றி பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் தனித்து செயல்படுவதாக முதலமைச்சர் ஏற்கனவே தனது நெருங்கிய வட்டாரங்களில் பேசியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது இந்த விவகாரமும் அதில் சேர்ந்துள்ளது. மேலும், தலைமை செயலாளரும் அரசுடன் ஒத்துச் செயல்படுவதில்லை எனும் அதிருப்தியும் முதல்வர் ரங்கசாமிக்கு உண்டு என்ற தகவல்களும் இருக்கின்றன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Puducherry (Pondicherry)

First Published :

July 08, 2025 10:17 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

புதுச்சேரி ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமிக்கு கருத்து வேறுபாடு? – சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தில் வெடித்த மோதல்

Read More

Previous Post

பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்; இனிய பாரதியின் சாரதியும் கைது

Next Post

கைதிகள் உத்தரவுகளை மீறியதோடு அதிகாரிகளை எரிச்சலூட்டினர்: தைப்பிங் சிறை அதிகாரி தகவல் | Makkal Osai

Next Post
கைதிகள் உத்தரவுகளை மீறியதோடு அதிகாரிகளை எரிச்சலூட்டினர்: தைப்பிங் சிறை அதிகாரி தகவல் | Makkal Osai

கைதிகள் உத்தரவுகளை மீறியதோடு அதிகாரிகளை எரிச்சலூட்டினர்: தைப்பிங் சிறை அதிகாரி தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin