News By K.V.Suthan
காப்பார்,
திருமண விழா, மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் ஒலி, ஒளி, இசை, அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்ற டீஜே (Disk Jockey) தொழிலில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் அரசாங்கத்தின் நேரடி கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என புஇஎம் (PUIM – Persatuan Usahawan Inspirasi Malaysia) அமைப்பின் தலைவர் டீஜே போய் உறுதியளித்தார்.

காப்பார் 7-ஆவது மைலில் அமைந்த மேற்பட்ட இயக்க அலுவலகக் கூட்ட அறையில் நடைபெற்ற புஇஎம் அமைப்பின் இரண்டாம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “நாட்டளவில் தனிநபராக உள்ள டீஜே தொழிலாளர்கள் ஒன்றிணைந்து புஇஎம் இயக்கத்தில் இணைந்து செயல்படுவதன் மூலம் தொழிலில் நிலைத்த வளர்ச்சி, நன்மைகள், மற்றும் அதிகாரபூர்வ உரிமைகள் கிடைக்க வழிவகுக்கும்” என்றார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் டீஜே தொழிலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட தொடங்கியுள்ளார்கள். ஆனால், தங்களாகவே கற்றுக்கொள்ள முடியாமல் சிரமப்படுவோருக்கு புஇஎம் மூலம் பயிற்சி வழங்கப்படுவதால் தொழிற்திறன் மேம்பட முடிகிறது என்று அமைப்பின் பொதுஆலோசகர் டீஜே ஜெஸ்ஸி கூறினார்.

மேலும், திறந்த வெளி மற்றும் மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் டீஜே கலைஞர்கள் ஒலி மற்றும் ஒளி அமைப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை முறையாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
“பலர் தன்னார்வமாக ஒலியமைப்பை கற்றுக் கொள்கிறார்கள், இது பாராட்டத்தக்கது. இருப்பினும், ஒலியின் அளவை நிர்வகிக்க வேண்டிய நுணுக்கங்களை அறியாமல், சத்தமாக இயக்குவதுதான் சிறந்தது என தவறான எண்ணத்தில் செயல்படுவது சில நேரங்களில் நிகழ்ச்சிக்கே பாதிப்பு ஏற்படுத்துகிறது” என பொருளாளர் டீஜே ஷாம் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிழைகளை தவிர்க்கும் வகையில், நிகழ்வுகளில் சிறப்பான ஒலியமைப்பை வழங்குவதற்கான தொழில்நுட்பங்கள், ஒலி கட்டுப்பாட்டு நுணுக்கங்கள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
“டீஜே தொழிலை முறையாக கற்றுக்கொள்வதற்கும், தொழில்முனைவோருக்கான ஆலோசனைகளுக்கும் புஇஎம் தயாராக உள்ளது. உதவி தேவைப்படுவோர் எங்களை தொடர்புகொளலாம்” என இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அழைப்பு விடுத்தனர்.
தொடர்புக்கு: 012-4211981 (டீஜே போய்)
The post டீஜே தொழிலில் ஏற்படும் சவால்களை அரசாங்கத்துக்குத் தூக்கும் புஇஎம் – தொழில்முனைவோருக்கு பயிற்சி, வழிகாட்டல். appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

