அக்டோபர் முதல், சீனா 64 வகையான மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளத்திற்கும், 17 வகையான மரபணு மாற்றப்பட்ட சோயாபீனுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
அக்டோபர் 2023-ல் சீன அரசு, 37 மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோள வகைகள் மற்றும் 14 மரபணு மாற்றப்பட்ட சோயாபீன் வகைகளுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது. 2024 மார்ச் மாதத்தில் கூடுதலாக மரபணு மாற்றப்பட்ட 27 மக்காச்சோளம் மற்றும் 3 சோயாபீன் வகைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மக்காச்சோளம் மற்றும் சோயாபீன் விளைச்சலை அதிகரிக்க இதுவரை 81 மரபணு மாற்றப்பட்ட விதைகளைச் சீனா அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் பி.டி கத்தரி (India’s Bt brinjal) மற்றும் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புக் குரலாலும், இதுசம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகளாலும் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் அண்டை நாடான சீனா மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி அளித்திருப்பது சூழலியலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

