• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால் அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிக்க மத்திய அரசு திட்டம் | centre plans to impose retaliatory tariffs on America

GenevaTimes by GenevaTimes
July 5, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால் அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிக்க மத்திய அரசு திட்டம் | centre plans to impose retaliatory tariffs on America
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக 12 நாடு​களுக்​கான உத்​தர​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்​திட்​டுள்​ளார். எந்​தெந்த நாடு​கள் என்ற விவரம் நாளை வெளி​யிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்​ளார். இந்​தி​யா உட​னான ஒப்​பந்​தம் கையெழுத்​தா​காத நிலை​யில், கூடு​தல் வரி விதிக்​கப்​பட்​டால் பதில் வரி விதிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

அமெரிக்க அதிப​ராக, 2-வது முறை​யாக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பொறுப்​பேற்​றார். அமெரிக்கா​வுக்கு இந்​தியா உட்பட உலக நாடு​கள் தங்​கள் நாட்டு பொருட்​களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்​ப​தாக தெரி​வித்​தார்.

இதற்கு பதிலடி​யாக பரஸ்பர வரி விதிக்​கப்​படும் என அறி​வித்த அவர், கடந்த ஏப்​ரல் 2-ம் தேதி அதற்​கான பட்​டியலை​யும் வெளி​யிட்​டார். இதில் இந்​திய பொருட்​களுக்கு 26% வரி விதிக்​கப்​படும் என கூறப்​பட்​டிருந்​தது.

90 நாட்கள் அவகாசம்: எனினும், இந்​தியா உள்​ளிட்ட சில நாடு​கள் பேச்​சு​வார்த்தை நடத்த முன்​வந்​தன. இதையடுத்​து, இடைக்​கால ஒப்​பந்​தம் ஏற்​படுத்​திக் கொள்ள ஏது​வாக பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​தார் ட்ரம்ப். இதையடுத்​து, அமெரிக்கா​வுடன் பல நாடு​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தன. 90 நாள் காலக்​கெடு வரும் 9-ம் தேதி நிறைய​வடைய உள்ள நிலை​யில், பிரிட்​டன், வியட்​நாம் ஆகிய 2 நாடு​களு​டன் மட்​டுமே அமெரிக்கா வரி விதிப்பு தொடர்​பாக ஒப்​பந்​தம் செய்​து​கொண்​டுள்​ளது.

இந்​நிலை​யில், 12 நாடு​களுக்​கான வரி விதிப்பு தொடர்​பான உத்​தர​வு​களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 4-ம் தேதி கையெழுத்​திட்டுள்ளார். எந்​தெந்த நாடு​கள் என்ற விவரம் நாளை வெளி​யிடப்​படும் என்று அவர் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் ட்ரம்ப் கூறும்​போது, “நான் 12 உத்​தர​வு​களில் கையெழுத்​திட்​டுள்​ளேன். அவை 7-ம் தேதி (நாளை) வெளி​யாகும்” என்​றார். “இதை ஏற்றுக்கொள்​ளுங்​கள் அல்​லது விட்​டு​விடுங்​கள்” என்று இந்த கடிதங்​களில் கூறப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்ளது.

இந்த 12 நாடு​கள் பட்​டியலில் இந்​தியா இடம்​பெற்​றுள்​ளதா என தெரிய​வில்​லை. அதே​நேரம், இந்​தியா உள்​ளிட்ட சில நாடு​களு​டன் ஒப்​பந்​தம் ஏற்​ப​டாத நிலை​யில் 12 நாடு​கள் உ​ட​னான வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறி​யுள்​ளார். இதன்​மூலம், இந்​தியா உள்​ளிட்ட நாடு​களுக்கு அவகாசம் தந்​திருப்​ப​தாக கருதப்​படு​கிறது.

உடன்​பாடு ஏற்​பட​வில்லை: இந்​தி​யா – அமெரிக்கா இடையே வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. மத்​திய அரசின் சிறப்பு செய​லர் மற்​றும் வர்த்தக துறை செய​லர் ராஜேஷ் அகர்​வால் பேச்​சு​வார்த்​தை​யின் தலை​வ​ராக செயல்​பட்டு வரு​கிறார். அகர்​வால் தலை​மையி​லான இந்​திய குழு கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை அமெரிக்​கா​வில் முகாமிட்டு இருந்​தது. பேச்​சு​வார்த்​தை​யில் இன்​னும் உடன்​பாடு எட்​டப்​பட​வில்லை என கூறப்​படு​கிறது. இதற்​காக அமெரிக்கா சென்​றிருந்த இந்​திய அதி​காரி​கள் குழு கடந்த 4-ம் தேதி நாடு திரும்​பியது.

ஜவுளி, தோல், காலணி சந்தை: ஜவுளி, தோல் மற்​றும் காலணி​கள் சந்​தையை அணுக வாய்ப்பு​அளிக்க வேண்​டும் என இந்​தியா கேட்​கிறது. அதே​நேரம், அமெரிக்​காவோ, வேளாண்மை மற்​றும் பால்​பொருள் சந்​தை​யில் தாராளம் காட்​டு​மாறு கோரு​வ​தாக கூறப்​படு​கிறது. வேளாண் விளைபொருட்​கள் விவ​காரத்​தில், குறிப்​பாக மரபணு மாற்​றப்​பட்ட பயிர்​களை அனு​ம​திப்​ப​தில் உடன்​பாடு எட்​டப்​பட​வில்லை என தகவல் வெளி​யாகி உள்​ளது. இந்​த துறை தொடர்​பானவிவ​காரத்​தில் இந்​தியா எப்​போதும் உறு​தி​யான நிலைப்​பாட்டை எடுத்​திருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் இதுபற்றி கூறியதாவது: அமெரிக்கா​ உட​னான வர்த்தக வரி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட இந்​தியா அவசரப்​பட​வில்​லை. குறிப்​பாக இந்​தி​யா​வின் பொருளா​தார நலன்களை பணயம் வைக்கும் ஒப்​பந்​தத்​தில் இந்​தியா கையெழுத்​தி​டாது. இந்த விவ​காரத்​தில் காலக்​கெடுவை காரணம் காட்டி இந்​தி​யா​வுக்கு அழுத்​தம் கொடுக்க முடி​யாது.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டாலும் சில விஷ​யங்​களில் இந்​தியா சர்​வ​தேச மன்​றங்​களை நாட தயங்​க​வில்​லை. வாகன உதிரி​பாகங்​கள் மற்​றும் அலுமினி​யம் மீதான அமெரிக்​கா​வின் வரி​களுக்கு எதி​ராக உலக வர்த்தக அமைப்​பில் இந்தியா முறையிட்​டது. எனவே, இந்​தியா மீது அமெரிக்கா தன்​னிச்​சை​யாக வரி விதித்​தால், அந்த நாடு வி​திக்​கும் அதே அளவுக்​கு பரஸ்​பர வரி வி​திக்​க​வும்​ இந்​தி​யா திட்​டமிட்​டுள்​ள​தாக தகவல்​ வெளி​யாகி உள்​ளது.



Read More

Previous Post

டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்யுமா இங்கிலாந்து அணி? – ENG vs IND | Highest target success chased in Test cricket history india england birmingham

Next Post

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை | Modi meets the President of Argentina

Next Post
அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை | Modi meets the President of Argentina

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை | Modi meets the President of Argentina

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin