• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

டிரம்ப்பின் வரிவிதிப்பை BRICS கூட்டமைப்பு நிராகரிக்கவுள்ளதாக தகவல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 5, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
டிரம்ப்பின் வரிவிதிப்பை BRICS கூட்டமைப்பு நிராகரிக்கவுள்ளதாக தகவல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) முதல் BRICS கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் சந்திக்கவுள்ளனர்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கடுமையான வர்த்தகக் கொள்கைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மத்திய கிழக்கில் தொடரும் நெருக்கடிகள் குறித்து தங்களுக்கிடையே இருக்கும் விரிசல்களைச் சரிசெய்ய BRICS நாடுகள் சிரமப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக உலகின் கிட்டத்தப்பட்ட பாதி மக்கள்தொகையைக் கொண்ட, உலகப் பொருளியலில் 40 விழுக்காடு பங்கு வகிக்கும் நாடுகள் அமெரிக்க வரிவிதிப்தை எதிர்த்து ஒன்றாகக் குரல் கொடுக்கப்போவதாக தகவல் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க வரிவிதிப்பு நியாயமற்றது என்று அந்நாடுகள் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு டிரம்ப், அந்நாட்டை எதிர்க்கும் தரப்புகள் மட்டுமின்றி பங்காளி நாடுகளுக்கும் எதிராக வரிவிதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துவந்துள்ளார். அந்த வகையில், இம்மாதம் ஒன்பதாம் தேதி முதல் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்ற விவரங்களைக் கொண்ட கடிதங்களை டிரம்ப், வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல் அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகளுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் அறிக்கையை மலேசியா, பிரேசில், ர‌ஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 11 வளரும் நாடுகளின் அரசதந்திரிகள் வரைந்து வருகின்றனர். சந்திப்பில் இடம்பெறக்கூடிய அறிவிப்பு எதுவும் அமெரிக்காவையோ அதன் அதிபரையோ வெளிப்படையாகக் குறிப்பிடாது என்று எதிர்பாக்கப்படுகிறது. அதேவேளை, அறிவிப்பு வா‌ஷிங்டனுக்கு எதிராக நேரடியாக விடுக்கப்படும் அரசியல் ரீதியான எதிர்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.

“மிகவும் கவனமாகக் கருத்துகள் தெரியப்படுத்தப்படும் சந்திப்பாக இது அமையும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. இறுதி அறிவிப்பில் அமெரிக்காவைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவது சிரமம்,” என்று ரியொ டி ஜெனிரோவின் பொன்டிஃபிக்கல் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் BRICS கொள்கை நிலைய இயக்குநர் மார்ட்டா ஃபெர்னாண்டஸ் தெரித்தார். குறிப்பாக வரிகளைக் குறைக்க அண்மையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள சீனாவுக்கு இது பொருந்தும்.

பிரிக்ஸ் சந்திப்பில் சீன அதிபர் ஸி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார் என்றும், 12 ஆண்டுகளில் முதன்முறையாக அவர் இச்சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை என்றும் கூறப்படுகிறது. “ஸி கலந்துகொள்ளாததற்கான காரணங்கள் குறித்து வதந்திகள் நிலவும் என்பது என் எதிர்பார்ப்பு,” என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சீனாவுக்கான முன்னாள் இயக்குநர் ரயன் ஹாஸ் குறிப்பிட்டார்.



Read More

Previous Post

நீரவ் மோடியின் தம்பி நேஹல் மோடியும் மோசடி வழக்கில் கைது!

Next Post

புறப்பட தயாரான விமானத்தில் இருந்து பாய்ந்தோடிய பயணிகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

Next Post
புறப்பட தயாரான விமானத்தில் இருந்து பாய்ந்தோடிய பயணிகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

புறப்பட தயாரான விமானத்தில் இருந்து பாய்ந்தோடிய பயணிகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin