சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் ஐஓபி 25-17, 25-23, 25-18 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.
மகளிர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி 25-15, 25-15, 25-18 என்ற செட் கணக்கில் பனிமலர் கல்லூரியை தோற்கடித்தது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் சிவந்தி கிளப் 25-23, 25-15, 25-21 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு காவல் துறை அணியை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.