Last Updated:
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், “இன்றைய அரசியல் சூழல் நமது ஜனநாயகத்திற்கு ஏற்றதாக இல்லை” எனக் கூறியுள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். இதில் அவர், “இன்றைய அரசியல் சூழல் நமது ஜனநாயகத்திற்கு ஏற்றதாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்றைய அரசியலின் சூழல் நமது ஜனநாயகத்திற்கு ஏற்றதாகவோ அல்லது நமது பண்டைய நாகரிக விழுமியங்களுக்கு ஏற்றதாகவோ இல்லை. அரசியல் போட்டியாளர்கள் எதிரிகள் அல்ல. எதிரிகள் எல்லைகளுக்கு அப்பால் இருக்கலாம், ஆனால் நாட்டிற்குள் யாரும் இருக்கக்கூடாது.
ஜனநாயக அமைப்புகளில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது கவலையளிக்கிறது. இந்த நிறுவனங்களின் புனிதத்தன்மை சமரசம் செய்யப்பட்டால், மக்கள் மாற்று வழிகளைத் தேடுவார்கள். இப்போது துணை ஜனாதிபதியும் ஜனாதிபதியும் கூட இந்த இடத்திற்குள் கொண்டுவரப்படுகிறார்கள். என் பார்வையில், இது நியாயமில்லை” எனத் தெரிவித்தார்.
June 30, 2025 7:43 PM IST


