சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து இந்த அம்சத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. அரிதான ஒன்றாக இருந்தாலும் இது மாதிரியான நிகழ்வுகள் குறித்தும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
பெரும்பாலான கிரெடிட் கார்டுகள், அந்த கார்டு பயன்படுத்தி நீங்கள் விமான டிக்கெட்டை புக் செய்யும்போது, விமான விபத்து காப்பீட்டு திட்டத்தை இலவசமாக வழங்குகின்றன. எனினும், இது முதன்மை கார்டு ஹோல்டருக்கு மட்டுமே பலன் அளிக்கும். குடும்பத்தினருக்கோ அல்லது ஆட்-ஆன் கார்டு ஹோல்டர்களுக்கோ காப்பீட்டு பலன் கிடைக்காது.
உதாரணமாக, IndusInd வங்கியின் Avios, Tiger மற்றும் Pinnacle ஆகியவை 25 லட்ச ரூபாய் காப்பீட்டை வழங்குகின்றன. மேலும், HDTV INFINIA, SBI Aurum மற்றும் American Express Platinum Charge கார்டுகள் முறையே ₹3 கோடி, ₹3.5 கோடி மற்றும் ₹5 கோடி காப்பீட்டுத் தொகையை வழங்குகின்றன.
இந்த பலனை கிளைம் செய்வதற்கு கிரெடிட் கார்டு ஹோல்டர் ஒரு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். கிரெடிட் கார்டு ஆக்டிவாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு தகுதி பெறும் டிரான்சாக்ஷன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு கோடி ரூபாய் காப்பீட்டுக்கு கடந்த 30 நாட்களுக்குள் ஒரு டிரான்சாக்ஷன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கடந்த 60 நாட்களில் ஒரு டிரான்சாக்ஷன்
கடந்த 180 நாட்களில் ஒரு டிரான்சாக்ஷன்.
விதிகள் என்பது கிரெடிட் கார்டு வழங்குநரைப் பொறுத்து மாறுபடலாம். எனவே, எப்பொழுதும் பாலிசி ஆவணங்களை கவனமாக படிப்பது அவசியம். அதே சமயத்தில், தீவிரவாதம் காரணமாக ஏற்படும் விமான விபத்துக்கு காப்பீடு வழங்கப்படாது.
கார்டு ஹோல்டர் விமான விபத்தில் இறந்துவிட்டால் நாமினி அல்லது குடும்பத்தார் சம்பவம் குறித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் தகவல் தெரிவித்து, இறப்பு சான்றிதழ் மற்றும் கோரிக்கை படிவம் போன்ற டாக்குமெண்ட்களை சமர்ப்பிக்க வேண்டும். கிளைம் செய்வதற்கான கால அவகாசம் என்பது கார்டு வழங்குநரைப் பொறுத்து மாறுபடும்.
Yatra SBI கார்டு மற்றும் AU Zenith Plus: 90 நாட்கள்
ICICI Sapphiro, Emeralde, Times Black மற்றும் Diamant: 60 நாட்கள்
Tata Neu Infinity மற்றும் HDFC Regalia போன்ற சில கார்டுகள் விபத்து நடந்த 12 மாதத்திற்குள் இறப்பு ஏற்படுவதற்கான காப்பீட்டை வழங்குகின்றன.
ஜூலை 15ஆம் தேதியில் இருந்து ELITE, Miles ELITE மற்றும் Miles PRIME போன்ற கார்டுகளுக்கான விமான விபத்து காப்பீட்டை SBI கார்டு நீக்க உள்ளது. 1 கோடி ரூபாய் மற்றும் 50 லட்ச ரூபாய் காப்பீட்டை இதன் மூலமாக SBI நிறுவனம் நிறுத்த உள்ளது. மேலும், ஆகஸ்ட் 11ம் தேதியிலிருந்து கோ-பிராண்டட் SBI கார்டுகளுக்கான பலன்களும் நிறுத்தப்பட உள்ளன.
June 30, 2025 9:52 PM IST

