Last Updated:
டெல்லி அரசு, காற்று மாசை கட்டுப்படுத்த, ஐஐடி கான்பூருடன் இணைந்து 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதிக்குள் செயற்கை மழையைப் பொழிய திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் வரும் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதிக்குள் செயற்கை மழையைப் பொழிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காற்று மாசினை குறைப்பதற்காக செயற்கை மழையை பொழியச் செய்ய டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ஐஐடி கான்பூருடன் கைகோர்த்துள்ள டெல்லி அரசு, முதல்முறையாக வரும் 4-ஆம் மற்றும் 11ம் தேதிக்குள் மழையைப் பொழிவிக்க உள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அறிவித்துள்ளார்.
கிளவுட் சீடிங் முறைப்படி நடத்தப்பட உள்ள சோதனைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் டெல்லி அரசு அனுமதி பெற்றுள்ளது. இந்த முறையில், விமானம் மூலம் மேக மூட்டத்தில் சில்வர் ஐயோடைட் துகள்கள், ஐயோடைஸ்ட் உப்பு, ராக் சால்ட் கலவை தூவப்படும். இவை, மேகத்தில் கலந்து மழை நீர்த் துளிகளை உருவாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இரண்டு முறை இந்த பணியை ஐஐடி கான்பூர் வெற்றிகரமாக செய்துள்ளதாகத் தெரிகிறது. சுமார் மூன்றரை கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட உள்ள இந்த முயற்சியில், 90 நிமிடங்களுக்கு வானில் கலவை தூவப்பட உள்ளது.
Delhi,Delhi,Delhi
June 29, 2025 7:56 PM IST

