• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு | pm modi speech on mann ki baat

GenevaTimes by GenevaTimes
June 29, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு | pm modi speech on mann ki baat
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அரசின் நலத் ​திட்டங்களால் நாடு முழுவதிலும் 95 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடம் பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். அதன்​படி 123-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நீண்ட காலத்​துக்​கு பிறகு, கைலாஷ் மானசரோவர் புனித யாத்​திரை மீண்​டும் தொடங்​கியுள்ளது.

ஜூலை 3-ம் தேதி அமர்​நாத் புனித யாத்​திரை தொடங்க இருக்​கிறது, ஒடி​சா, குஜ​ராத் உட்பட பல்​வேறு மாநிலங்​களில் ஜெகந்​நாதர் ரத யாத்​திரை நடை​பெறுகிறது. வடக்​கு, தெற்​கு, கிழக்​கு, மேற்கு என்ற பாகு​பாடு இன்றி லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் புனித யாத்​திரைகளில் பங்​கேற்​கின்​றனர். இதன்​மூலம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு மேலோங்​கு​கிறது.

2 புதிய சாதனை​கள்: நமது நாட்​டின் 2 புதிய சாதனை​களை உங்​களோடு பகிர்ந்துகொள்ள விரும்​பு​கிறேன். கண்​களை பாதிக்​கும் ட்ராகோமா நோய் இல்​லாத நாடாக இந்​தியா உரு​வெடுத்துள்ளது. இது லட்​சக்​கணக்​கான சுகா​தார பணி​யாளர்​களின் உழைப்​புக்கு கிடைத்த வெற்றி ஆகும். அனைத்து ஊரக பகுதி வீடு​களுக்​கும் ஜல் ஜீவன் திட்​டத்​தின் கீழ் சுத்​த​மான குடிநீர் வழங்​கப்​படு​கிறது.

இதனால் ட்ராகோமா உட்பட பாக்​டீரி​யா​வால் பரவும் நோய்​களின் அபா​யம் குறைந்துவரு​கிறது. இந்​தி​யா​வில் நோய்​களுக்​கான அடிப்​படை காரணி​கள் கண்​டறியப்​பட்​டு, அந்த நோய்​கள் அறவே ஒழிக்​கப்​பட்டு வரு​கின்றன என்று உலக சுகா​தார அமைப்பே புகழாரம் சூட்டி உள்​ளது.

சர்​வ​தேச தொழிலா​ளர் அமைப்பு சமீபத்தில் ஓர் அறிக்​கையை வெளி​யிட்​டது. இதில், இந்​தியா முழு​வதும் 64 சதவீதத்​துக்​கும் அதி​க​மான மக்​களுக்கு சமூக பாது​காப்பு ஆதா​யம் கிடைத்து வரு​வ​தாக குறிப்​பிடப்​பட்டு உள்​ளது. அதாவது, சுமார் 95 கோடிக்​கும் மேற்​பட்ட மக்​கள் அரசு நலத் ​திட்​டங்​களால் பயனடைந்து வரு​கின்​றனர். கடந்த 2015-ம் ஆண்​டில் இந்த எண்​ணிக்கை 25 கோடிக்​கும் குறை​வாகவே இருந்​தது.

அவசரநிலை ஓர் இருண்ட காலம்: கடந்த 1975-ம் ஆண்​டில் நாட்​டில் அவசர நிலை பிரகடனம் செய்​யப்​பட்​டது. இந்த அவசர நிலையை அமல் செய்​தவர்​கள், நமது அரசி​யலமைப்பு சட்​டத்தை படு​கொலை செய்​தனர். அதோடு நீதி​மன்​றங்​களை தங்​களின் அடிமை​களாக மாற்ற முயற்சி செய்​தனர். ஜார்ஜ் பெர்​னாண்​டஸ் உள்​ளிட்ட தலைவர்கள் கொடூர​மான சித்​ர​வதைகளுக்கு ஆளாகினர். அவசர நிலை காலத்​தில் மிசா சட்​டத்​தின்​படி யாரை வேண்​டு​மா​னாலும் கைது செய்ய முடி​யும் என்ற நிலை இருந்தது. மக்​களின் கருத்து சுதந்​திரம் பறிக்​கப்​பட்​டது.

அவசர நிலையை எதிர்த்து ஆயிரக்​கணக்​கான மக்​கள் போராடினர். அவர்​கள் காட்​டுமி​ராண்​டித்​தன​மாக தாக்​கப்​பட்​டனர். அது ஓர் இருண்ட காலம். ஆனால், அடக்​கு​முறைக்கு மக்​கள் பணி​ய​வில்​லை. அதை எதிர்த்து போராடி மாபெரும் வெற்றி பெற்​றனர். அவசர நிலை திணிக்​கப்​பட்டு 50 ஆண்​டு​கள் நிறைவடைந்​திருக்​கிறது. இதை நினை​வு​ கூரும் வகை​யில் கடந்த 25-ம் தேதி அரசி​யலமைப்​பு படு​கொலை தினத்தை கடை​பிடித்​தோம்.

உடல் உறு​தி,ஆரோக்​கிய வாழ்​வில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்​டும். இதற்கு உடல் பரு​மனை குறைக்க வேண்​டும். அன்​றாட உணவில் 10 சதவீதம் வரை எண்​ணெய்யை குறைத்​தால் உடல் பரு​மன் பிரச்​சினைக்கு தீர்வு காண முடி​யும். ஜூன் 5-ம் தேதி உலக சுற்​றுச்​சூழல் தினத்தை கொண்​டாடினோம். இந்​தி​யா​வின் சுற்​றுச்​சூழலை பாது​காக்க தனி​நபர்​கள் முதல் பல்​வேறு குழுக்​கள் அதிதீ​விர​மாக பணி​யாற்றி வரு​கின்​றன.

சுற்​றுச்​சூழலை பாது​காக்க அம்​மா​வின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்​கம் நாடு முழு​வதும் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இதன்​படி, நாடு முழு​வதும் கோடிக்​கணக்​கான மரங்​கள் நடப்​பட்டுள்​ளன. உங்​கள் கிராமங்​கள், நகரங்​களில் அதிக அளவில் மரங்​களை நட வேண்​டு​கிறேன். இதன்​மூலம் நமது வருங்​கால தலை​முறை​யினரை பாது​காக்க முடி​யும்.

இப்​போது அனை​வரின் பார்​வை​யும் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தின் மீது நிலைபெற்​றிருக்​கிறது. நமது குரூப் கேப்​டன் ஷுபன்ஷு சுக்லா, விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருக்​கிறார். அவரோடு நான் கலந்​துரை​யாடினேன். எங்​கள் உரை​யாடலை நீங்​களும் கேட்​டிருப்​பீர்​கள். அடுத்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், ஷுபன்ஷு சுக்​லா​வின் விண்​வெளி பயணம் குறித்து விரி​வாக பேசுவேன்.

ஜூலை 1-ம் தேதி மருத்​து​வர்​கள், ஆடிட்​டர்​கள் தின​மாக கொண்​டாடப்​படு​கிறது. இரு பிரி​வினரும் நமது சமூகத்​தின் மிகப்​பெரிய தூண்​கள். மருத்​து​வர்​கள் நமது உடல் ஆரோக்​கி​யத்​தின் பாது​காவலர்​கள். ஆடிட்​டர்​கள் நமது பொருளா​தா​ரத்​தின் வழி​காட்​டிகள். அவர்களுக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்​. இவ்​வாறு பிரதமர்​ பேசி​னார்​.



Read More

Previous Post

நெற்றியில் திருநீறு, குங்குமம் வைப்பது ஏன் தெரியுமா..!

Next Post

வேன் விபத்துக்குள்ளானதில் முதியவர் பலி; ஒன்பது பேர் காயம்

Next Post
வேன் விபத்துக்குள்ளானதில் முதியவர் பலி; ஒன்பது பேர் காயம்

வேன் விபத்துக்குள்ளானதில் முதியவர் பலி; ஒன்பது பேர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin