• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜுலை 1ஆம் தேதி முதல் விரைவு, சுற்றுலா பேருந்து ஓட்டுநர்,பயணிகளுக்கு கட்டாய சீட் பெல்ட் : ஜேபிஜே | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 29, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஜுலை 1ஆம் தேதி முதல் விரைவு, சுற்றுலா பேருந்து ஓட்டுநர்,பயணிகளுக்கு கட்டாய சீட் பெல்ட் : ஜேபிஜே | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விரைவு, சுற்றுலா பேருந்து ஓட்டுநர்களும் பயணிகளும் ஜூலை 1 முதல் சீட் பெல்ட்களை அணிய வேண்டும்.  ஜனவரி 2020 முதல் தயாரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு இது சட்டம் அமல்படுத்தப்படும் என்று சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) இன்று அறிவித்துள்ளது. பழைய பேருந்துகளுக்கு சீட் பெல்ட்களை மறுசீரமைக்க அவகாசம் வழங்கப்படும் என்றும், அமலாக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை முதல் இணக்கத்தை உறுதி செய்வார்கள் என்றும் JPJ இயக்குநர் ஜெனரல் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி கூறினார்.

முன்னர், நாங்கள் ஒரு சார்பு அணுகுமுறையை ஏற்றுக்கொண்டோம். ஆனால் ஜூலை 1 முதல், அதை நாங்கள் கண்டிப்பாக அமல்படுத்துவோம் என்று அவர் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேற்கோள் காட்டியது. ஓட்டுநர்கள் பயணிகளை சீட் பெல்ட்களை அணிய நினைவூட்டத் தவறினால், பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஓட்டுநருக்கும் பேருந்து இயக்க நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்படும்.

ஓட்டுநர் நினைவூட்டல் அளித்திருந்தாலும், பயணிகள் இணங்க மறுத்தால், பயணிகளுக்கு மட்டும் தலா 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் விளக்கினார். புறப்படுவதற்கு முன்பு நினைவூட்டல்கள் வழங்கப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க JPJ அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பு கேமிரா (CCTV) பதிவுகளைப் பயன்படுத்துவார்கள் என்று ஏடி கூறினார். பேருந்து நடத்துநர்களுடன் ஏற்கெனவே கலந்துரையாடல்கள் நடந்துள்ளதாகவும், அமலாக்கத்தை எளிதாக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பயணத்தைத் தொடங்குவதற்கு முன் அனைத்து பயணிகளும் தங்கள் இருக்கை பெல்ட்களை அணிவதை உறுதி செய்வதற்கு ஓட்டுநர்கள் பொறுப்பு. எதிர்காலத்தில் மீறல்களில் எந்த சமரசமும் இருக்காது என்று JPJ தலைவர் வலியுறுத்தினார்.

ஜூன் 9ஆம் தேதி கெரிக் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் 42 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் உஃப்சி  பல்கலைக்கழகச் சேர்ந்த 15  (UPSI) மாணவர்கள் உயிரிழந்தைத்  தொடர்ந்து கடுமையான சட்டங்களுக்கான அழைப்புகள் வந்தன. இந்த விபத்தில் மொத்தம் 48 பேர் சிக்கினர். அதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.  இந்த  பேருந்து விபத்தில் தொடர்புடைய UPSI மாணவர்கள் குழு, பேருந்து ஓட்டுநர் பேருந்து  நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

Previous articleவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா, சமந்தா



Read More

Previous Post

ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது வன்கொடுமை வழக்கு

Next Post

தாக்குதல்கள் மொத்தமும் வீண்: மீண்டெழும் ஈரான் – அமெரிக்காவுக்கு பேரிடி

Next Post
தாக்குதல்கள் மொத்தமும் வீண்: மீண்டெழும் ஈரான் – அமெரிக்காவுக்கு பேரிடி

தாக்குதல்கள் மொத்தமும் வீண்: மீண்டெழும் ஈரான் - அமெரிக்காவுக்கு பேரிடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin