• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உத்தர பிரதேசத்தில் கதாகாலட்சேபகர் மீது தாக்குதல்: 2 சமூகத்துக்கு இடையே பெரிதாகும் பிரச்சினை | Growing problem between two communities in Uttar Pradesh

GenevaTimes by GenevaTimes
June 29, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
உத்தர பிரதேசத்தில் கதாகாலட்சேபகர் மீது தாக்குதல்: 2 சமூகத்துக்கு இடையே பெரிதாகும் பிரச்சினை | Growing problem between two communities in Uttar Pradesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் 15 ஆண்​டு​களாக கதாகாலட்​சேபம் செய்​யும் முகுட்​மணி சிங் யாதவ் மற்​றும் அவரது உதவி​யாளர் சந்த் குமார் யாதவ் தாக்​கப்​பட்​டனர். முகுட்​மணி​யின் தலை​முடியை மொட்​டையடித்த கும்​பலில் 4 இளைஞர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

பிராமணர் அல்​லாத முகுட்​மணி கதாகாலட்​சேபம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரி​வித்து தாக்​குதல் நடந்​துள்​ளது. இதை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் உட்பட பலரும் கண்​டித்​துள்​ளனர். இதற்​கிடை​யில், முகுட்​மணி மீது பாலியல் மற்​றும் பிராமணர் என பொய் கூறிய​தாக வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இதுகுறித்து உ.பி.​யின் மற்​றொரு பிரபல கதாகாலட்​சேபகர் லவ்லி சாஸ்​திரி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முகுட்​மணி மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல் யாதவ சமூகத்​தினர் அனை​வருக்​கும் அவமானம். யாதவர்​களில் கதாகாலட்​சேபகர்​கள் அதி​க​மாகி​விட்​ட​தால், பிராமணர்​களுக்கு கோபம் வரு​கிறது. யாதவர்​களால் வாழ்​நாள் முழு​வதும் வணங்​கப்​பட்​ட​வர்​கள் இப்​போது அவர்​களைத் தாக்​கு​கிறார்​கள்.

வீடு கட்ட பூசை, திருமண சடங்​கு​கள் என அனைத்​துக்​குமே பிராமணர்​களை அழைக்​கிறோம். யாதவர்​களால் தம் சமூக மக்​களின் திரு​மணங்​கள், மத சடங்​கு​களை தானே நடத்த முடி​யாதது ஏன்? யாதவர்​கள் இப்​போதே ஒன்​றுபட வேண்​டும். இவ்​வாறு லவ்லி சாஸ்​திரி கூறி​யுள்​ளார். இந்​நிலை​யில், முகுட்​மணியை சமாஜ்​வாதி கட்சி தலைமை அலு​வல​கத்​துக்கு அழைத்து சால்வை போர்த்தி மரி​யாதை செய்​துள்​ளார் அக்​கட்சி தலை​வர் அகிலேஷ் யாதவ். அகிலேஷ் கூறுகை​யில், ‘‘சமூக ஆக்​கிரமிப்​பாளர்​கள் இதர சமூகத்​தின் கலைஞர்​களை​யும் விட்​டு​வைப்​ப​தில்​லை. உ.பி.​யில் 90 சதவி​கித சமூகத்​தினர் கொண்ட தலைநகரம் ஒரு சதவி​கிதத்​தினரிடம் சென்​றது எப்​படி?’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

பாஜக தலை​மை​யில் ஆளும் கூட்​டணி உறுப்​பினரும் உ.பி. கேபினட் அமைச்​சரு​மான ஓம் பிர​காஷ் ராஜ்பர் கூறுகை​யில், ‘‘நடந்த சம்​பவத்தை நாமும் கண்​டிக்​கிறோம். முகுட்​மணி 2 ஆதார் அட்​டைகளை வைத்து பிராமணர் என ஏமாற்​றி​னார். பிராமணர்கள், சத்​திரியர்​கள், யாதவர்​கள், விஸ்​வகர்​மா​வினர் என அவர​வருக்​கென பணி​கள் உள்​ளன. இந்த சூழ்​நிலை​யில் மற்ற சமூகங்​களின் பணி​களை அபகரிப்​பது தொடங்கி விட்​டது. பிறப்​பில் இருந்து இறப்​புக்கு பின்​பும் காரி​யங்​கள் செய்து வரும் பிராமணர்​களின் பணி​களை அபகரித்​தால் தகராறு வரத்​தான் செய்​யும். முதலில் அகிலேஷ் தன் குடும்​பத்​தின் சடங்​கு​களுக்கு பிராமணர்​களை அழைப்​பதை நிறுத்​துகிறாரா பார்க்​கலாம்’’ என்று தெரி​வித்​தார்.

இதற்​கிடை​யில், முகுட்​மணி மீதான வழக்கை எட்டாவாஎஸ்​எஸ்பி பிரஜேஷ் வஸ்​த​வா​விடம் இருந்து ஜான்​சி போலீ​ஸா​ரிடம்​ ஒப்​படைக்​க முதல்​வர்​ ஆதித்​ய​நாத்​ உத்​தர​விட்​டுள்​ளார்​.



Read More

Previous Post

Tamilmirror Online || CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

Next Post

ஜூனியர் ரோல் பால் இந்திய அணி சாம்பியன் | Junior Roll Ball Indian Team Champion

Next Post
ஜூனியர் ரோல் பால் இந்திய அணி சாம்பியன் | Junior Roll Ball Indian Team Champion

ஜூனியர் ரோல் பால் இந்திய அணி சாம்பியன் | Junior Roll Ball Indian Team Champion

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin