• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாதந்தோறும் ரூ.5,500 வேணுமா? – இந்த அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம் பற்றி தெரியுமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 7, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
மாதந்தோறும் ரூ.5,500 வேணுமா? – இந்த அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம் பற்றி தெரியுமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெரும்பாலான மிடில் க்ளாஸ் குடும்பத்தினர் மாதாந்திர வருமானத்தை நம்பியே தங்கள் செலவுகளை திட்டமிடுவார்கள். ஒருவேளை ஏதோ ஒரு அவசர செலவு வந்துவிட்டால், அந்த மாதத்தின் மீதி நாட்களை ஓட்டுவது சிரமமாகிவிடும். அதுவும் மாதத்தின் கடைசி வாரங்களை சொல்ல வேண்டியதேயில்லை. ஒவ்வொரு மாதமும் வரவு எட்டணா, செலவு பத்தணா என மோசமான சூழல் இருக்கும் போது, மாதம்தோறும் கூடுதல் வருவாய் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என பலரும் நினைப்பார்கள். உங்களுக்கு அவசியம் தேவைப்படும் அப்படியொரு திட்டம் பற்றிதான் இன்று பார்க்கப் போகிறோம்.

விளம்பரம்

இந்திய தபால் நிலையங்களில் பல விதமான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் மாதாந்திர வருவாய் திட்டம். இது உங்களுக்கு உத்தரவாதமான ரிட்டர்ன் தொகையும் மாதம்தோறும் நிரந்தர வருவாயும் தருகிறது. இந்த திட்டத்தில் தனிநபர் ஒருவர் சிங்கிளாகவோ அல்லது மனைவியோடு சேர்ந்து கூட்டாகவோ கணக்குகளை தொடங்கலாம். குறிப்பிட்ட தொகையை மொத்தமாக டெபாசிட் செய்வதன் மூலம், இதில் முதலீடு செய்தவர்களுக்கு மாதம்தோறும் நிரந்தர வருமானம் கிடைக்கிறது. தனிநபர் ஒருவர் இந்த மாதாந்திர வருவாய் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதுவே கூட்டுக் கணக்காக இருந்தால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

விளம்பரம்

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து வருடங்களாகும். இந்த டெபாசிட் தொகையில் கிடைக்கும் வட்டி உங்களுக்கு மாதம்தோறும் தரப்படும். அதன்படி கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், அவர்களுக்கு மாதம்தோறும் வருவாயாக ரூ.9,250 கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்திருந்தால் மாதம்தோறும் வருவாயாக ரூ.5,500 கிடைக்கும். தற்போது போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருவாய் திட்டத்திற்கு 7.4 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் உங்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்குகள் தொடங்கலாம். அதிகபட்சம் ஒரு கூட்டுக் கணக்கில் மூன்று நபர்கள் சேர முடியும்.

விளம்பரம்

இதையும் படிங்க: 
ரூ.76-க்கு உபர் ஆட்டோ புக் செய்தவருக்கு ரூ.7.66 கோடி கட்டணம்.. ஷாக்கான வாடிக்கையாளர்!

இந்த திட்டத்தில் சேர வேண்டுமென்றால், உங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று உங்களின் ஆதார் கார்டு, முகவரி சான்று, புகைப்பட சான்று, பான் கார்டு மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படங்களை சமர்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகையை ஐந்து வருடத்திற்கு இடையே எடுக்க முடியாது என்ற போதிலும் அவசர பணத்தேவை என்றால், ஒரு வருடம் கழித்து இதிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. ஒன்று முதல் மூன்று வருடங்களுக்குள் பணம் எடுக்கப்பட்டால், அதற்கு அபராதமாக மொத்த டெபாசிட் தொகையில் 2 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும்.

விளம்பரம்

மூன்று வருடங்களுக்குப் பிறகு ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்பே பணத்தை திரும்ப எடுத்தால், டெபாசிட் தொகையில் ஒரு சதவிகிதம் அபராதமாக செலுத்த வேண்டும். ஐந்து வருடங்களுக்குப் பிறகு இதில் முதலீடு செய்த மொத்த தொகையும் உங்களுக்கு திருப்பி தரப்படும். அதேசமயம் நாம் விரும்பினால் இந்த தொகையை மறுபடியும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு புதிதாக முதலீடு செய்ய முடியும். மாதம்தோறும் வரக்கூடிய செலவுகளை சமாளிக்க முடியவில்லை என நினைப்பவர்கள் இந்த போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

விளம்பரம்

Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்களது மாதாந்திர செலவுகளை ஈடுகட்ட இது உதவியாக இருக்கும். உத்தரவாதமன ரிட்டர்ன் மற்றும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் வசதி போன்றவை காரணமாக, உங்களின் நிதிநிலையை வளர்த்துக் கொள்ளவும் மாதாந்திர செலவுகளை கையாளவும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

கருப்பு மண் ஆடுகளத்தில் தோல்வி ஏன்? – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் விளக்கம் | Ruturaj Gaikwad explains how pitch tricked Chennai Super Kings

Next Post

ஆன்லைன் மோசடியில் நீங்கள் இழந்த பணத்தை மீட்டெடுப்பது எப்படி???

Next Post
ஆன்லைன் மோசடியில் நீங்கள் இழந்த பணத்தை மீட்டெடுப்பது எப்படி???

ஆன்லைன் மோசடியில் நீங்கள் இழந்த பணத்தை மீட்டெடுப்பது எப்படி???

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin