பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதிக்கு ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம், கந்தளாய் நகரில் இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் செலுத்திச் சென்ற பஸ், வீதியை விட்டு விலகி ஒரு மின் கம்பம், சாலையோரக் கடை மற்றும் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மோதியது. . இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

