Last Updated:
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA), பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மாத்திரைகள் குறித்து விரிவான சோதனைகளை மேற்கொண்டது. இந்தச் சோதனைகளில் 15 மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தோல்வியடைந்ததையடுத்து, அவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு, பாராசிட்டமால் உட்பட 15 மருந்துகளுக்குத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என அறிவிக்கப்பட்ட இந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட இந்த மருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், மருத்துவர்கள், நர்சிங் ஹோம்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் யாரும் இந்தத் தடை செய்யப்பட்ட மருந்துகளை இருப்பு வைக்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மீறி இந்தத் தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அல்லது உள்ளூர் மருத்துவ மேற்பார்வையாளருக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
June 27, 2025 7:30 PM IST


