மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இன்று பிற்பகல் புதுமையான பிராந்திய தொழில், திறன் மற்றும் வேலைவாய்ப்பு கான்க்ளேவ் நிகழ்வு துவங்கியது. இதனை அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் பங்கேற்று துவக்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் பங்கேற்க செல்வதற்காக நேற்று இரவு தயாரான அவரது கான்வாய் வாகனங்கள், மத்தியப் பிரதேசம் மாநிலம், ராட்லாம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்புவதற்கு சென்றுள்ளன. அங்கு வாகனங்களுக்கு டீசல் நிரப்பிவிட்டு, நகர்ந்த வாகனங்கள் பெட்ரோல் பங்கைவிட்டு வெளியே செல்வதற்கு முன்பாகவே தட்டி நின்றது.
இது குறித்து வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங் ஊழியர்களிடம் விவரம் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், முன்னே டீசல் நிரப்பிவிட்டு நகர்ந்த சில கான்வாய் வாகனங்கள் நெடுஞ்சாலையில் நகரமுடியாமல் தட்டி நின்று தகவல் தெரியவந்தது.
உடனடியாக, இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில், ஒவ்வொரு 20 லிட்டர் டீசலிலும், 10 லிட்டர் நீர் கலந்திருப்பது தெரியவந்தது. இது தெரியவந்ததும், அதிகாரிகள் அந்த பெட்ரோல் பங்கை மூடி அதற்கு சீல் வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய முதல்வரின் கான்வாய் வாகனங்களில் ஒரு காரின் ஓட்டுநர், “நாங்கள் இந்தூரிலிருந்து வாகனங்களை கொண்டு வந்திருந்தோம். இந்த வாகனங்களில் ஒன்று மறுநாள் முதலமைச்சரின் வாகன கான்வாயில் இடம்பெறவிருந்தது. நாங்கள் இந்தூரிலிருந்து பயணித்ததால், டீசல் அளவு குறைவாக இருந்தது, எனவே நாங்கள் இந்த பாரத் பெட்ரோலியம் பம்பிற்கு எரிபொருள் நிரப்ப வந்தோம். அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பினோம்.
VIDEO | Ratlam, Madhya Pradesh: As many as 19 vehicles of CM Mohan Yadav’s convoy had to be towed after water was reportedly filled instead of diesel in them. The petrol pump was later sealed over fuel contamination.#MPNews #MadhyaPradeshNews
(Full video available on PTI… pic.twitter.com/IQV9aE2Jfc— Press Trust of India (@PTI_News) June 27, 2025
எரிபொருள் நிரப்பிய பிறகு, சில வாகனங்களை முன்னால் அனுப்பினோம். சில வாகனங்களை நிலையத்திலிருந்து வெளியேற முடிந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே நெடுஞ்சாலையில் நின்றுவிட்டன. மற்றவை சில மீட்டர்கள் நகர்ந்த பிறகு இங்கேயே பழுதடைந்தன. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் அங்கே வந்து விசாரணை நடத்தினர்” எனத் தெரிவித்தார்.
தற்போது அதிகாரிகள், பெட்ரோல் பங் டீசலில் எப்படி நீர் கலந்தது. அது எதர்ச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்டு கலக்கப்பட்டதா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
June 27, 2025 4:54 PM IST
ம.பி. முதல்வர் கான்வாய் கார்களில் டீசலுக்கு பதிலாக நிரப்பப்பட்ட தண்ணீர்… விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

