• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா? | Unconditional ceasefire Will Russia China resolution pass in the UN Security Council

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in உலகம்
Reading Time: 6 mins read
0
நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா? | Unconditional ceasefire Will Russia China resolution pass in the UN Security Council
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெஹ்ரான்: ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையே உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்தன. இதன் மீதான வாக்களிப்பு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நேற்று கூடியது. 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் கூட்டத்தில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்தன.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்துக்கான வரைவுத் தீர்மானத்தின் மீது எப்போது வாக்களிப்பு நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் கவுன்சில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் ஒன்பது வாக்குகள் ஆதரவாகவும், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா அல்லது சீனாவின் வீட்டோக்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். இந்த வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா எதிர்க்கும் என்று தெரிகிறது. எனவே இந்த தீர்மானம் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த வரைவு தீர்மானம், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கிறது. ஆனாலும் இந்த தீர்மானத்தில் அமெரிக்காவின் பெயரோ அல்லது இஸ்ரேலின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. நேற்று ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அழித்துவிட்டதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, இந்தக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்க தாக்குதல்களைக் கண்டித்தன.

சீனாவின் ஐ.நா. தூதர் ஃபூ காங் பேசுகையில், “மத்திய கிழக்கில் அமைதியை வலிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அடைய முடியாது. ஈரானிய அணுசக்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ராஜதந்திர வழிமுறைகள் தீர்ந்துவிடவில்லை, அமைதியான தீர்வுக்கான நம்பிக்கை இன்னும் உள்ளது” என்று கூறினார்.

ஆனால், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் டோரதி ஷியா, “அமெரிக்கா தீர்க்கமாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இஸ்ரேலை ஒழிக்கும் முயற்சியை நிறுத்தி, அணு ஆயுதங்களை உருவாக்குவதை நிறுத்துமாறு பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்துகிறோம். ஈரான் நீண்ட காலமாக அதன் அணு ஆயுதத் திட்டத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றும் சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் எங்கள் நல்லெண்ண முயற்சிகளை முறியடித்துள்ளது. ஈரானில் அணு ஆயுதம் இருக்கக் கூடாது” என்றார்.

தொடர்ந்து பேசிய ரஷ்யாவின் ஐ.நா. தூதர் வாசிலி நெபென்சியா, “மத்திய கிழக்கில் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு மீண்டும் ஒருமுறை துன்பத்தை ஏற்படுத்த, அமெரிக்காவின் விசித்திரக் கதைகளை நம்பும்படி நாம் கேட்கப்படுகிறோம். வரலாறு நமது அமெரிக்க சகாக்களுக்கு எதையும் கற்பிக்கவில்லை என்ற எங்கள் நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஈரானின் ஐ.நா. தூதர் அமீர் சயீத் இரவானி குற்றம் சாட்டினார், “அமெரிக்காவின் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. இதில் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் ஒரு அரசியல் ஆயுதமாக கையாளப்பட்டுள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ராஜதந்திரத்தை அழிக்கிறது. அமைதியான அணுசக்திக்கான சட்டபூர்வமான உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்குப் பதிலாக, அது ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எனது நாட்டின் நலன்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது” என்று இரவானி கவுன்சிலிடம் கூறினார்.

அதே நேரத்தில் இஸ்ரேலின் ஐ.நா. தூதர் டேனி டானன், ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக அமெரிக்காவைப் பாராட்டினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரிட்டனின் ஐ.நா. தூதர் பார்பரா உட்வார்ட்,”ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த கவலைகளுக்கு ராணுவ நடவடிக்கை மட்டும் நீடித்த தீர்வைக் கொண்டு வர முடியாது. இப்போது நிதானத்தைக் காட்டுமாறு ஈரானை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி, இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ராஜதந்திர தீர்வைக் காணுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.



Read More

Previous Post

உங்களுடைய பட்ஜெட்டில் சர்வதேச பயணத் திட்டத்தை உருவாக்குவது எப்படி…? டிப்ஸ் இதோ….

Next Post

தீவிரவாத போராளி இயக்கத்துடன் தொடர்புடைய 36 வெளிநாட்டினர் கைது | Makkal Osai

Next Post
தீவிரவாத போராளி இயக்கத்துடன் தொடர்புடைய 36 வெளிநாட்டினர் கைது | Makkal Osai

தீவிரவாத போராளி இயக்கத்துடன் தொடர்புடைய 36 வெளிநாட்டினர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin