அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார். மேலும், அவரின் குடியரசு கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஜே.டி. வான்ஸும் வெற்றிபெற்றார்.
இவரின் மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஓர் இந்திய வம்சாவளி. இந்தத் தம்பதிக்கு, இவான், விவேக், மிராபெல் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.
அதிபர் தேர்தலுக்கு முன்பு உஷா ஒருமுறை, “என் பெற்றோர்கள் இந்துக்கள். எங்களை நல்ல பெற்றோராகவும் நல்ல மனிதர்களாகவும் மாற்றியதில் இதுவும் ஒன்று.” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தனது பிள்ளைகள் வளரும்போது கத்தோலிக்கர்களாக ஞானஸ்நானம் பெற வேண்டுமா என்பது குறித்து உஷா பேசியிருக்கிறார்.
சிட்டிசன் மெக்கெய்ன் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய உஷா, “அதை அவர்களே தேர்வு செய்யலாம்.
அவர்களைக் கத்தோலிக்க பள்ளிக்கு நாங்கள் அனுப்புகிறோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சாய்ஸ் கொடுத்திருக்கிறோம்.

