• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘டிராகன்’ விண்கலம் மூலம் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார் ஷுபன்ஷு சுக்லா | Shubhanshu Shukla reaches Space after 28 hour journey aboard Dragon spacecraft

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
‘டிராகன்’ விண்கலம் மூலம் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார் ஷுபன்ஷு சுக்லா | Shubhanshu Shukla reaches Space after 28 hour journey aboard Dragon spacecraft
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புளோரிடா: அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் புறப்பட்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, நேற்று மாலை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். அவர்கள் 2 வாரத்துக்கு அங்கு தங்கியிருந்து 60 ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுடன் இணைந்து வர்த்தக ரீதியான விண்வெளி திட்டத்தை அமெரிக்காவின் அக்ஸியம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 4 வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐஎஸ்எஸ்) அனுப்பி, 2 வார காலம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்தில் இஸ்ரோ சார்பில் பயணிப்பதற்கு, ககன்யான் திட்டத்துக்காக ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த விமானப்படை விமானியான ஷுபன்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார். அவருடன் அமெரிக்காவின் பெக்கி விட்சன் (கமாண்டர்), ஹங்கேரியின் திபோர் கபு, போலந்தின் ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி ஆகிய வீரர்களும் இத்திட்டத்தில் இணைந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட்டுடன் இணைந்த டிராகன் விண்கலம் மூலம் இந்த குழுவினர் நேற்று முன்தினம் விண்வெளிக்கு புறப்பட்டனர்.

இந்நிலையில், பால்கன் ராக்கெட்டில் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்து விண்வெளி பயணத்தை நேற்று தொடங்கியது. இந்த டிராகன் விண்கலத்துக்கு ‘கிரேஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிராகன் விண்கலம் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, சர்வதேச விண்வெளி மையத்தில் நேற்று மாலை 4 மணிக்கு இணைந்தது. டிராகன் விண்கலத்தில் வந்த ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களையும், சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்கெனவே தங்கி ஆய்வு பணி மேற்கொண்டு வரும் குழுவினர் கட்டியணைத்து வரவேற்றனர். குளிர்பான பாக்கெட்களை வழங்கினர்.

டிராகன் குழுவினர் இன்று முதல் 2 வார காலத்துக்கு அங்கு தங்கியிருந்து, பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். உணவு தானியங்கள், பாசிகளை வளர்த்தல், நுண்ணிய நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள், புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில் மின்னணு கருவிகள் மூலம் மனிதர்கள் உரையாடுவது, விண்வெளி சூழலில் ஊட்டச்சத்து, தாவரங்களின் பாரம்பரிய பண்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது உட்பட மொத்தம் 60 ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். அதன்பிறகு, டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

‘குழந்தைபோல குதூகலிக்கிறேன்’: விண்வெளி பயண அனுபவம் குறித்து இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா கூறியதாவது:

பூமியில் இருந்து விண்வெளி நோக்கிய விரைவு பயணம் அருமையாக இருந்தது. ஜன்னல் கண்ணாடி வழியாக தெரியும் காட்சிகளை வெகுவாக ரசித்தேன். விண்வெளி பயணத்தின்போது நான் நன்கு தூங்கியதாக சக வீரர்கள் கூறினர்.

புவிஈர்ப்பு விசை இல்லாத சூழலில் பயணம் தொடங்கியதும், இருக்கையில் இருந்து பின்நோக்கி சென்றதுபோல இருந்தது. விண்வெளியில் நுழைந்ததும் திடீரென அமைதி நிலவி, ஒன்றுமே இல்லாததுபோல இருந்தது. சீட் பெல்ட்டை அகற்றியதும் வெற்றிடத்தில் மிதந்தோம். முதலில் சற்று நிலைதடுமாறுவதுபோல உணர்ந்தேன். நேரம் ஆகஆக, வெற்றிடத்தில் எப்படி அடி எடுத்து வைப்பது, நடப்பது, சாப்பிடுவது என கற்றுக்

கொண்டுள்ளேன். இது அருமையான அனுபவம்.

புதிய சூழல், புதிய சவால். இதை எல்லாம் பார்த்து ஒரு குழந்தைபோல குதூகலிக்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழுவினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பது உற்சாகம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Read More

Previous Post

வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்பு: புதிய உச்சத்தைத் தொடும் என வியாபாரிகள் கருத்து | Traders says gold prices touch new highs

Next Post

தெலங்கானா: தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண் – ரெயில் சேவை பாதிப்பு | Makkal Osai

Next Post
தெலங்கானா: தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண் – ரெயில் சேவை பாதிப்பு | Makkal Osai

தெலங்கானா: தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண் - ரெயில் சேவை பாதிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin