Last Updated:
மகாராஷ்டிராவில் அடுத்த 5 ஆண்டுகளில் மின் கட்டணம் 26% வரை குறையவுள்ளதாக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின் கட்டணத்தை படிப்படியாக 26 சதவீதம் வரை குறைக்க உள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார்.
மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக, மகாராஷ்டிர மின்வாரிய நிறுவனம் வழங்கிய முன்மொழிவுக்கு மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் 70 சதவீதம் பேர் 100 யூனிட்டுகளுக்கும் கீழ் மின்சாரம் பயன்படுத்துவது கண்டறியப்பட்ட நிலையில், ஸ்மார்ட் மீட்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, மின்சாரப் பயன்பாட்டிற்கான நேரக் கட்டணக் கட்டமைப்பின் கீழ் முதல் ஆண்டு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக 26 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புகளில் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணக் குறைப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், கடந்த காலங்களில் 10 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த முன்மொழிந்த மின்வாரியம் தற்போது அந்த நிலையை பின்னோக்கி கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
June 26, 2025 10:13 PM IST
ஐந்து ஆண்டுகளில் அதிரடியாக குறையப்போகும் மின் கட்டணம்… 26% வரை குறைக்க முதல்வர் பட்நாவிஸ் அறிவிப்பு


