ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது. விராட் கோலியின் அதிரடி சதம் பெங்களூரு வெற்றிக்கு கைகொடுக்கவில்லை என்றபோதும், ஜோஸ் பட்லரின் சதம் ராஜஸ்தான் வெற்றி பெற காரணமானது.
ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளெசிஸ் 44 ரன்னில் ஆட்டம் இழந்த நிலையில், மேக்ஸ்வெல் மற்றும் சௌரவ் சௌகான் சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும், விராட் கோலி அதிரடியாக விளையாடி 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.
இதனால், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் சேர்த்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சதமடித்த விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் ஏழாயிரத்து 500 ரன்கள் சேர்த்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதையடுத்து, 184 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாம்சன் – ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடியாக 148 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 19 புள்ளி ஒரு 1 ஓவரில் 189 ரன்கள் குவித்து ராஜஸ்தான் வெற்றிபெற்றது.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் தனது 100வது ஐபிஎல் போட்டியில் சதமடித்தார். இந்த சீசனில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் பெங்களூரு அணி தோல்வியடைந்த நிலையில், ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)