Last Updated:
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளிக்கு, இவர் தனது அறக்கட்டளை மூலமாக மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்
இந்தியாவில் கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என்பது ஏராளமான இளைஞர்களுக்கு ஒரு பெரிய கனவாக இருக்கும். முன்பு இதற்கான வழிகள் மிகவும் சவாலானதாக இருந்த நிலையில், தற்போது உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் என ஏராளமான தளங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளன.
கிரிக்கெட் வீரர்கள் பிசிசிஐ -யிடம் இருந்து போட்டி கட்டணமாகவும், விளம்பரங்களில் இடம்பெறுவதன் மூலமாகவும் வருமானத்தை பெறுகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வீரர்களின் தகுதிக்கு ஏற்ற வகையில் விளம்பர நிறுவனங்கள் அவர்களை அணுகுகின்றன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான சுனில் கவாஸ்கர் சொத்துக்களை அள்ளிக் குவித்து வாங்கி குவித்து வருகிறார். கோவாவில் மட்டும் இவருக்கு 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் சுனில் கவாஸ்கர் 10,122 ரன்கள் குவித்துள்ளார். மொத்தம் 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கவாஸ்கர் 34 சதங்களை நிறைவு செய்திருக்கிறார்.
1985 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளை நிர்வகிக்கக்கூடிய ‘ப்ரொபஷனல் மேனேஜ்மென்ட் குரூப்’ சுருக்கமாக பி.எம்.ஜி என அழைக்கப்படக்கூடிய நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் வீரர்களுக்கான நிகழ்ச்சிகளை வடிவமைப்பது, விருதுகள் வழங்குதல் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. இதன் மூலமாகவும் கவாஸ்கருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.
அவருடைய பங்களா வடக்கு கோவாவில் உள்ளது. ஐரோப்பிய மாடலில் இந்த இல்லத்தினை சுனில் கவாஸ்கர் வடிவமைத்திருக்கிறார். இதனை தவிர்த்து மும்பையிலும் அவருக்கு கடற்கரை அருகே 8 மாடி கட்டிடம் உள்ளது. இன்னும் ஒரு இடத்தில் 9 மாடி கட்டிடமும் சுனில் கவாஸ்கரின் பெயரில் உள்ளது.
ஒட்டுமொத்தமாக கவாஸ்கர் 225 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்கள் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கமெண்டரி செய்வதற்காகவும் கோடிக்கணக்கில் கவாஸ்கர் ஊதியம் பெறுகிறார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளிக்கு, கவாஸ்கர் தனது அறக்கட்டளை மூலமாக மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
June 26, 2025 5:46 PM IST


