ஆதித்யா பிர்லா பர்சனல் லோன்: தகுதி வரம்பு
கடன் பெறுபவர் 21 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
நிலையான வருமானம் பெறும் மாத வருமானம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்கள்.
குறைந்தபட்ச மாத வருமானம் 20,000 ரூபாய்.
கடன் பெறுபவருக்கு ஒரு நிலையான பொருளாதாரப் பதிவேடு இருக்க வேண்டும்.
வழக்கமாக 750-க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களுக்கு சாதகமான விதிகளோடு பர்சனல் லோன் வழங்கப்படும்.
கடன் பெறுபவர் கடன் கோரும் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆதித்யா பிர்லா பர்சனல் லோன்: தேவையான டாக்குமென்ட்கள்
- அடையாள அட்டையாக ஆதார் எண், PAN கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்றவை தேவைப்படும். மேலும், முகவரி சான்றிதழாக பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது வாடகை ஒப்பந்தத்தை சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பத்தை சமர்ப்பித்த தேதியிலிருந்து கடந்த 3 மாதங்களுக்கான சேலரி ஸ்லிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.
- கடந்த 3 மாதங்களுக்கான பேங்க் ஸ்டேட்மென்ட் தேவைப்படும்.
ஆதித்யா பிர்லா பர்சனல் லோன்: வட்டி விகிதங்கள், கால அவகாசம் மற்றும் கட்டணங்கள்:
பொதுவாக வட்டி விகிதமானது ஓர் ஆண்டுக்கு 10% முதல் 28% வரை வசூலிக்கப்படுகிறது. எனினும், இது ஒரு நபருடைய கிரெடிட் ஸ்கோர் மற்றும் பிற தகுதிபெறும் காரணிகளைப் பொறுத்து அமையும்.
ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரையிலான பர்சனல் லோனை வழங்குகிறது. இதற்கு 7 வருடங்கள் வரை கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசமாக வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட மொத்த கடன் தொகையில் 4% ப்ராசசிங் கட்டணமாக வசூலிக்கப்படும்.
வழக்கமாக இது 7 வருடங்கள் வரை வழங்கப்படுகிறது. தங்களுக்கு ஏற்ற ஒன்றை கடன் பெறுநர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
பர்சனல் லோன் அக்கவுண்ட்டை முன்னதாக மூட நினைக்கும் நபர்கள், மீதம் இருக்கக்கூடிய பேலன்ஸை செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் பர்சனல் லோன்: விண்ணப்ப செயல்முறை
- உங்களுடைய மொபைல் போனிலிருந்து ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் அதிகாரப்பூர்வப் பக்கத்தை திறந்து அதில் பர்சனல் லோனுக்கான ‘அப்ளை நவ்’ பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- உங்களுடைய 10 இலக்க மொபைல் நம்பரை என்டர் செய்யவும். இந்த மொபைல் நம்பர் உங்களுடைய ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- உங்களுடைய மொபைல் நம்பருக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ என்டர் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
- விண்ணப்பப் படிவத்தை தேடி அதை சரியாக பூர்த்தி செய்யவும். படிவத்தை நிரப்பிய பிறகு ‘ப்ரொசீடு’ பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- அதன் பிறகு உங்களுக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை நீங்கள் என்டர் செய்ய வேண்டும்.
- ஆதித்யா பிர்லா கேப்பிட்டலில் கிடைக்கும் பல்வேறு பர்சனல் லோன் ஆப்ஷன்களில் உங்களுக்கு தேவையான ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை தேர்வு செய்துவிட்டு, மேலும் தொடரலாம்.
- KYC விவரங்களை பூர்த்தி செய்த பிறகு தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்கி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- ஆஃப்லைன் முறையில் பர்சனல் லோன் வாங்க நினைப்பவர்கள் உங்களுடைய பகுதியில் உள்ள ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் கிளைக்கு நேரடியாக செல்லலாம்.
- லோன் பற்றிய சமீபத்திய விவரங்களை தெரிந்துகொள்வதற்கு அவ்வப்போது ஆதித்யா பிர்லா கேப்பிட்டலின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிடுங்கள்.
June 26, 2025 7:33 PM IST

