• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2 சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு விளையாடிய 5 வீரர்கள்.. சாத்தியமானது எப்படி தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
2 சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு விளையாடிய 5 வீரர்கள்.. சாத்தியமானது எப்படி தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இப்திகார் அலிகான் என்பவர் இந்தியாவுக்கும் இங்கிலாந்து அணிக்கும் விளையாடி இருக்கிறார். பட்டோடி அரச குடும்பத்தை சேர்ந்தவரான இப்திகார் அலிகான் 1932-33 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கினார்.

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் சதமும் அடித்துள்ளார். 1946 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு அவர் கேப்டனாக செயல்பட்டார்.

6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றன. மற்றொரு வீரராக யோன் மோர்கன் இங்கிலாந்து அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் விளையாடியுள்ளார்.

அயர்லாந்து அணிக்காக 2006ம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் மோர்கன் விளையாடினார். அந்த காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் பங்கேற்றார். அதன் பின்னர் இங்கிலாந்து அணிக்காக களம் இறங்கிய மோர்கன் 13 ஆண்டுகளாக அதே அணியில் இருந்தார்.

2019 ஆம் ஆண்டு மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்றது. 16 டெஸ்ட், 248 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 115 சர்வதேச டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடி இருக்கிறார்.

வாண்டார் மென்டர்வ் தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். ஆல்ரவுண்டரான இவர் 39 ஒரு நாள் மற்றும் 63 டி20 போட்டிகளில் பங்கேற்று ஒரு நாள் போட்டிகளில் 45 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 68 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்க அணிக்காக இவர் 26 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த கோரி ஆண்டர்சன் தற்போது அமெரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இவரது ஆட்டம் பாராட்டைப் பெற்றது.

சர்வதேச போட்டிகளை பொறுத்த அளவில் 13 டெஸ்ட், 49 ஒரு நாள் மற்றும் 42 டி20 போட்டிகளில் கோரி ஆண்டர்சன் விளையாடி உள்ளார். டிம் டேவிட் தனது ஆரம்பகால கிரிக்கெட்டை சிங்கப்பூர் அணிக்காக விளையாடினார். பின்னர் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு மாறிக்கொண்டார்.

சிறந்த பினிஷர்களில் ஒருவராக டீம் டேவிட் பாராட்டுகளை பெற்று வருகிறார். ஆஸ்திரேலியா அணியை பலமுறை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றதில் டீம் டேவிட்டின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

வலது கை பேட்ஸ்மேனான டிம் டேவிட் 4 ஒரு நாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சிங்கப்பூர் அணிக்காக 14 மேட்ச்சும் ஆஸ்திரேலியா அணிக்காக 44 போட்டிகளிலும் டேவிட் விளையாடி உள்ளார்.

ஒரு நாட்டுக்காக விளையாடும் வீரர் மற்றொரு நாட்டிற்கு விளையாட தன்னை மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு அந்த வீரர் தனது புதிய நாட்டில் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களின் தடையில்லா சான்றும் அவசியம். ஒருவேளை இரட்டை குடியுரிமை பெற்றிருந்தால் இந்த அணி மாற்ற முறை இன்னும் எளிதாகும்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 26, 2025 5:54 PM IST

Read More

Previous Post

“கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தலைவர்களை அவமதிப்பது தவறு” முருகன் மாநாடு குறித்து ராமதாஸ் விமர்சனம்

Next Post

வீடு, மனை பத்திரபதிவு செய்ய போறீங்களா? இந்த அப்டேட்டை தெரிஞ்சுக்கோங்க!

Next Post
வீடு, மனை பத்திரபதிவு செய்ய போறீங்களா? இந்த அப்டேட்டை தெரிஞ்சுக்கோங்க!

வீடு, மனை பத்திரபதிவு செய்ய போறீங்களா? இந்த அப்டேட்டை தெரிஞ்சுக்கோங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin