• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரயில்வே ட்ராக்கில் அதிவேகமாக வந்த கார்… மடக்கி பிடித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ரயில்வே ட்ராக்கில் அதிவேகமாக வந்த கார்… மடக்கி பிடித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 26, 2025 4:46 PM IST

கலக்கல் ஹீரோ, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் தன்னை பிடிக்க துரத்தும் கேங்கிடம் இருந்து தப்பிக்க, ரயில்வே ட்ராக்கில் காரை ஓட்டி தப்பிக்கும் புல்லரிக்கும் சம்பவம், காட்சியாக இடம்பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். 

ரயில்வே ட்ராக்கில் அதிவேகமாக வந்த கார்ரயில்வே ட்ராக்கில் அதிவேகமாக வந்த கார்
ரயில்வே ட்ராக்கில் அதிவேகமாக வந்த கார்

தெலங்கானாவில் ரயில்வே தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்று அலறவிட்ட இளம்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கலக்கல் ஹீரோ, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் தன்னை பிடிக்க துரத்தும் கேங்கிடம் இருந்து தப்பிக்க, ரயில்வே ட்ராக்கில் காரை ஓட்டி தப்பிக்கும் புல்லரிக்கும் சம்பவம், காட்சியாக இடம்பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். இக்காட்சியைக் கண்ட அனைவருக்கும் ரயில்வே ட்ராக்கில் கார் ஓட்டினால் எப்படி இருக்கும்? என யோசிக்கும் அளவுக்கு கூஸ்பம்ஸாக இருக்கும். ஆனால் இதேபோல் இளம்பெண் ஒருவர் நிஜத்திலேயே ரயில்வே ட்ராக்கில் காரை ஓட்டி விபரீதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ரங்காரா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சங்கர்பள்ளி ரயில்வே கேட்டில், வாகன ஓட்டிகள் பலரும் ரயில் கடந்து செல்லும் வரை அங்கேயே காத்திருந்தனர். அப்போது காரில் வந்த லக்னோவைச் சேர்ந்த ரவிகா சோனி என்ற இளம்பெண், ரயில் புறப்பட்டதும் ட்ராக்கை கடந்து செல்லாமல் மாறாக ட்ராக்கிலேயே, காரை ஓட்ட ஆரம்பித்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் காரை தடுத்தி நிறுத்தி பெண்ணை காப்பாற்ற ட்ராக்கில் இறங்கி ஓடினர்.

ஆனால் தாறுமாறாக காரை ஓட்டிய ராவிகா, வண்டியை நிறுத்தாமல் சுமார் 6 கிலோ மீட்டர் வரை சென்றுள்ளார். ரயில்வே கேட் மேன் தகவல் கொடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் காரை மடக்கி பிடிக்க முயன்றனர். கதிகலங்க விட்ட சம்பவத்தில் ஒரு வழியாக நீண்ட நேரத்திற்கு பின் நாகுல பள்ளி அருகே காரை மடக்கி நிறுத்தி, உள்ளே இருந்த ரவிகாவை பிடித்தனர். கார் ஓட்ட தெரியாமல் தவறுதலாக ரயில்வே ட்ராக்கில் விட்டுவிட்டாரா? என சந்தேகம் அடைந்தபோது, ரவிகா தலைக்கேறிய போதையில் வேண்டுமென்றே இந்த விபரீத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனால் கடுப்பான அதிகாரிகள், ரவிகா சோனியை கைது செய்து காரை ட்ராக்கில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் ஹைதராபாத் – பெங்களூர் வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.  மதுபோதையில் காரை ரயில்வே ட்ராக்கில் ஓட்டுகிறோம் என்பதை மறந்து தன் உயிரில் தானே விளையாடி இறுதியில் ரயில்வே போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நாகுல பள்ளி ரயில்வே போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில், ராவிகாவின் செயல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 26, 2025 4:46 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ரயில்வே ட்ராக்கில் அதிவேகமாக வந்த கார்… மடக்கி பிடித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நடந்தது என்ன?

Read More

Previous Post

Tamilmirror Online || போதைப் பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணா கைது

Next Post

தோசை கல்லால் மனைவியைத் தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்.. அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா?

Next Post
தோசை கல்லால் மனைவியைத் தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்.. அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா?

தோசை கல்லால் மனைவியைத் தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்.. அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin