Last Updated:
தோனியின் பயோ பிக் படத்திலும் நரேந்திர சிங் தோனி குறித்த தகவல்கள் ஏதும் இடம் பெறவில்லை. இதற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்கிற அளவுக்கு அவர் பிரபல நபராக இருந்து வருகிறார். சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற போதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவரது குடும்பத்தினரை பற்றி அறிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் காணப்படுகிறது. தோனியின் மகள் ஜீவா குறித்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
தோனிக்கு ஒரு அண்ணனும் ஒரு அக்காவும் உள்ளனர். அவரது குடும்பத்தில் தோனி தான் கடைக்குட்டி நபராக உள்ளார். தோனியை பற்றி அதிகம் அறிந்தவர்களுக்கு அவருடைய அண்ணன் நரேந்திர சிங் தோனி குறித்து அதிகம் தெரியாது.
தோனியின் பயோ பிக் படத்திலும் நரேந்திர சிங் தோனி குறித்த தகவல்கள் ஏதும் இடம் பெறவில்லை. இதற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தோனியின் பணத்தை நரேந்திர சிங் தோனி சரியாக பயன்படுத்தவில்லை என்றும் இதனால் இருவருக்கும் இடையே உறவில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ராஞ்சியில் முதியோர் இல்லத்தை கட்டுவதற்கு தோனி அவரது அண்ணனுக்கு பணத்தை கொடுத்ததாகவும் ஆனால் அவரது அண்ணன் தன்னுடைய மனைவி வழி உறவினர்களிடம் அந்த பணத்தை செலவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தோனி கடும் அதிருப்தியில் இருந்ததாக ஜார்க்கண்ட் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
தோனி தற்போது தனது சொந்த ஊரான காஞ்சியில் நேரத்தை கழித்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. முன்பு பாஜகவில் இருந்த நரேந்திர சிங் தோனி பின்னாளில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நரேந்திர சிங் தோனியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் முரண்பாடாகவே உள்ளன. அதே நேரம் தோனிக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
June 26, 2025 2:19 PM IST


