• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘நீ ஒன்றும் கர்ட்லீ ஆம்புரோஸ் அல்ல’ என சீண்டிய இயன் ஹீலி: வெகுண்டெழுந்த ஷமார் ஜோசப் | You are not Curtly Ambrose: Ian Healy sledges West Indies; Shamar Joseph responds

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘நீ ஒன்றும் கர்ட்லீ ஆம்புரோஸ் அல்ல’ என சீண்டிய இயன் ஹீலி: வெகுண்டெழுந்த ஷமார் ஜோசப் | You are not Curtly Ambrose: Ian Healy sledges West Indies; Shamar Joseph responds
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்டுகள் சரிந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 180 ரன்களுக்குச் சுருண்டது. ஷமார் ஜோசப் 4 விக்கேட்டுகலையும் ஜேய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் தன் முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது.

180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது, ஆஸ்திரேலியாவின் 30 ஆண்டுகளில் எடுத்த ஆகக் குறைந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் ஆனது. இத்தனைக்கும் மே.இ.தீவுகளின் கேட்சிங் மிகவும் மோசமாக இருந்தது. கவாஜாவுக்கு 2 கேட்ச்கள் உட்பட 4 கேட்ச்களை ட்ராப் செய்தனர். அப்படியும் ஆஸ்திரேலியா தேறவில்லை என்பதுதான் நகைமுரண்.

ஸ்மித், லபுஷேன் இல்லாத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கமின்ஸ் வேகப்பந்து வீச்சு சாதக ஆடுகளத்தில் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார், பும்ரா ஸ்பெஷலிஸ்ட் என்று கொண்டு வரப்பட்ட சாம் கோன்ஸ்டாஸ் தொடக்க வீரராக அனுபவஸ்தர் கவாஜாவுடன் இறங்கினார். ஆனால் கோன்ஸ்டாஸ் பாச்சா பலிக்கவில்லை. அவர் 14 பந்துகள் ஆடி வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸின் பிரமாதமான உத்தியில் சிக்கினார்.

ஷமார் ஜோசப் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பனில் ஒரு அரிய வெற்றியைச் சாதித்துக் கொடுத்தவர். அதன் பிறகு அவர் பெரிதாக செய்திகளில் வரவில்லை. ஆனால் சாம் கோன்ஸ்டாசை வீழ்த்துவோம், திட்டமுள்ளது என்றார் ஷமார் ஜோசப். உடனே ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி வாய்க் கொழுப்பாக, ‘நீ ஒன்றும் கர்ட்லி ஆம்புரோஸ் இல்லை. அந்த பிரிஸ்பன் டெஸ்ட்டிற்குப் பிறகே நீ வீசியதெல்லாம் குப்பை’ என்று விஷத்தைக் கக்க, ஷமார் ஜோசப் பந்து வீச்சில் தன் விஷத்தைக் கக்கி மீண்டும் ஆஸ்திரேலியாவைக் கதற வைத்தார்.

சிட்னி டெஸ்ட் பும்ரா ரிவர்ஸ் ஷாட் பில்ட் அப் கைகொடுக்காமல் கோன்ஸ்டாஸ் அட்டகாசமான இன்ஸ்விங்கருக்கு மட்டையை பந்திற்குக் கொண்டு வர முடியவில்லை. இவரை வீழ்த்த எதற்கு ஆம்புரோஸ் என்பது போல் பிளம்ப் எல்.பி. ஆனால் நடுவர் அவுட் கொடுக்காமல் ரிவியூவில் அவுட் என தீர்ப்பளிக்கப்பட்டு வெளியேறினார்.

கேமரூன் கிரீன் (3), புதிய ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் (11), ஓப்பனர் உஸ்மான் கவாஜா (47) ஆகியோரை ஷமார் ஜோசப் காலி செய்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டையும் வீழ்த்தி இவர்தான் 5 விக்கெட்டுகளை எடுக்க வேண்டியது ஆனால் ஹெட் செய்த எட்ஜை ஷேய் ஹோப் பிடிக்க பந்து கேரி ஆகவில்லை என்று 3ம் நடுவர் தவறான தீர்ப்பை வழங்கி ஹெட்டைக் காப்பாற்றினார். ரீப்ளேயில் பந்து தெளிவாக கையில் சென்று கேட்ச் ஆனது தெரியவர கடைசியில் ட்ராவிஸ் ஹெட் 78 பந்துகளில் 59 ரன்களை விளாசி கிரீவ்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். கமின்ஸ் கவாஜாவுக்கு அடுத்தபடியாக 28 ரன்களை எடுத்தார்.

ஜாஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹாசில்வுட் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் வீழ்த்தி சீல்ஸ் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஒரு கட்டத்தில் 111/3 என்று இருந்த ஆஸ்திரேலியா ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டுடன் சேர்த்து சரிவு கண்டு அடுத்த 7 விக்கெட்டுகளை 69 ரன்களுக்கு இழந்து 180 ரன்கள் என்ற ஆகக்குறைந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்குச் சுருண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜான் கேம்ப்பெல்லின் விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க்.

ஆனால் மே.இ.தீவுகள் பேட்டிங்கும் இந்தப் பிட்சில் சரியாக அமையவில்லை. கிரெய்க் பிராத்வெய்ட் (4), ஜான் கேம்பல் (7) ஆகியோரை விரைவில் மிட்செல் ஸ்டார்க் காலி செய்ய. கொஞ்சம் நின்று தடுத்துப் பார்த்த கேசி கார்ட்டி (20), கமின்சின் அட்டகாசமான எழுச்சிப் பந்துக்கு இரையாக, நைட் வாட்ச்மேன் வாரிக்கன் அருமையான ஹாசில்வுட் இன்ஸ்விங்கருக்கு ஸ்டம்புகளை இழந்து டக் அவுட் ஆனார். ஆட்ட முடிவில் பிராண்டன் கிங் 23 ரன்களுடனும், கேப்டன் ராஸ்டன் சேஸ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



Read More

Previous Post

ஜூன் 26, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Next Post

அபிநந்தனை சிறைபிடித்த பாக். மேஜர் இறுதிச் சடங்கில் ராணுவத் தலைவர் பங்கேற்பு | Pak Major who captured Abhinandan in 2019 killed – Army chief attends funeral

Next Post
அபிநந்தனை சிறைபிடித்த பாக். மேஜர் இறுதிச் சடங்கில் ராணுவத் தலைவர் பங்கேற்பு | Pak Major who captured Abhinandan in 2019 killed – Army chief attends funeral

அபிநந்தனை சிறைபிடித்த பாக். மேஜர் இறுதிச் சடங்கில் ராணுவத் தலைவர் பங்கேற்பு | Pak Major who captured Abhinandan in 2019 killed - Army chief attends funeral

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin