துவாஸில் டெக் பார்க் கிரசென்ட்டில் உள்ள உணவகத்தில் ஊழியர் ஒருவர் பூனைக்குட்டியை டப்பாவில் அடைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு அமைப்புக்கு (SPCA) கிடைத்த தகவலின்படி, பூனைக்குட்டியை அவர் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து அடைந்தார் என கூறப்பட்டுள்ளது.
லாரிகள் மோதி விபத்து (வீடியோ): ஊழியர் மரணம் – ஓட்டுநர் கைது
பின்னர் அந்த பிளாஸ்டிக் டப்பாவை மீண்டும் மீண்டும் அவர் உருட்டி துன்புறுத்தல் செய்ததாகவும் அந்த நபரின் சக ஊழியர் SPCA-விடம் இந்த சம்பவத்தைப் பற்றிப் புகார் அளித்தார்.
தகவல் கொடுத்த ஊழியர் பகிர்ந்து கொண்ட புகைப்படத்தில், ஒரு வட்ட வடிவ பிளாஸ்டிக் டப்பாவில் பூனைக்குட்டி இறுக்கமாக அடைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் தள மேற்பார்வையாளருக்கும் தெரியும் என கூறப்படுகிறது.
தீவிரமடையும் வழக்கு
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி SPCA அங்கு திடீர் ஆய்வை மேற்கொண்டது, அப்போது பூனை டப்பாவில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும் இந்த மோசமான செயலுக்கு எதிராக ஊழியருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இது குறித்து மதர்ஷிப்பிடம் பேசிய SPCA நிர்வாக இயக்குனர் ஆர்த்தி சங்கர், இந்த வழக்கை தீவீர விசாரணைக்காக தேசிய பூங்கா அமைப்பில் (NParks) உள்ள விலங்கு மற்றும் கால்நடை சேவைக்கு (AVS) அனுப்பியுள்ளதாகக் கூறினார்.
பூனைக்குட்டியின் இருப்பிடம் அல்லது நிலை குறித்து எந்த தகவலையும் SPCA கூறவில்லை. அதே போல ஊழியர் குறித்த விவரங்களையும் அது வெளியிடவில்லை.
பொதுமக்கள் விலங்கு வதை தொடர்பான சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் குறித்து தேசிய பூங்கா அமைப்பிடம் புகாரளிக்கலாம்.
Photo: SPCA

