மத்திய விரைவுச்சாலையில் (CTE) நேற்று (ஜூன் 25) 2 லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் லாரியில் பயணித்த 34 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
sg road vigilante என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியான இந்த விபத்தின் காட்சிகளில், CTE விரைவுச்சாலையில் ஒரு லாரி பக்கவாட்டில் விழுவதைக் காண முடிந்தது.
CTEல் 2 &3வது பாதையில் பயணித்த 2 லாரிகள் விபத்து
அந்த காணொளியில், விபத்தில் சிக்கிய லாரிகளில் ஒன்று CTE சாலையின் 3வது பாதையில் (வலதுபுறத்தில் இருந்து மூன்றாவது பாதை) சென்று கொண்டிருந்தது, மற்றொன்று 2வது பாதையில் சென்று கொண்டிருந்தது.
இரண்டாவது பாதையில் சென்றுகொண்டிருந்த லாரி, மற்றொரு லாரிக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த சிறிது நேரத்தில் அந்த லாரியின் மீது இடதுபுறம் சாய்ந்ததில் விபத்து ஏற்பட்டது.
இதில் விபத்துக்குள்ளான லாரி இடது புறமாக நிலைதடுமாறி பக்கவாட்டில் கவிழ்வதையும், லாரியில் இருந்த பொருட்கள் சிதறி சாலையின் பக்கவாட்டில் விழுவதையும் காண முடிந்தது.
நேற்று பிற்பகல் 1:55 மணியளவில் மோதல் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை மற்றும் SCDF உறுதிப்படுத்தின.
இந்த விபத்தில் பயணிகள் இருக்கையில் ஆடவர் ஒருவர் சிக்கிக் கொண்டார், பின்னர் ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி SCDF அவரை மீட்டது.
மயக்க நிலையில் இருந்த அவர், டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் உயிரிழந்தார் என்றும் கூறப்பட்டது.
32 வயதுடைய மற்றொரு லாரி ஓட்டுநர், சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இறந்தவர் பயணித்த லாரியின் ஓட்டுநர் 24 வயதுடைய ஆடவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
20 வெளிநாட்டு ஊழியர்கள் ஒரே இடத்தில்.. “உள்வாடகை விட கூடாது” என சொன்ன சக ஊழியருக்கு வெட்*டு

