• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

திருமண செலவு அதிகமா இருக்கா? இனி ஈஸியா Marriage loan அப்ளை பண்ணலாம்? எப்படி தெரிஞ்சுக்கோங்க!

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
திருமண செலவு அதிகமா இருக்கா? இனி ஈஸியா Marriage loan அப்ளை பண்ணலாம்? எப்படி தெரிஞ்சுக்கோங்க!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மேரேஜ் லோன் என்றால் என்ன?

திருமணம் நடைபெறும் இடம், உணவு, ஆடைகள், நகைகள், அலங்காரங்கள், புகைப்படம் மற்றும் போக்குவரத்து போன்ற திருமணத்திற்கான செலவுகள் அனைத்தையும் இந்த மேரேஜ் லோன் ஈடுகட்டுகிறது. மற்ற லோன்களைப் போல அல்லாமல் திருமண கடனுக்கு நீங்கள் எந்த ஒரு அடமானமும் வழங்க தேவையில்லை. முழுக்க முழுக்க உங்களுடைய வருமானம், கடன் வரலாறு மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கான திறனின் அடிப்படையில் கடன் வழங்குனர் உங்களுக்கு இந்த கடனை அங்கீகரிப்பார்.

இந்தியாவில் திருமண கடனுக்கான வட்டி விகிதங்கள்:

2025ல் இந்தியாவில் திருமண கடனுக்கான வட்டி விகிதங்கள் ஒரு ஆண்டுக்கு 10 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடன் வழங்குனர் மற்றும் கடன் பெறுபவருடைய பொருளாதார சுயவிவரத்தை பொறுத்து அமையும்.

*ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பொதுத்துறை வங்கிகள் ஒரு ஆண்டுக்கு 10.75 சதவீதம் முதலில் இருந்து திருமண கடன்களை வழங்குகின்றன.

*HDFC வங்கி மற்றும் ICICI வங்கி போன்ற தனியார் வங்கிகள் 11 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை திருமண கடனுக்கான வட்டி விகிதத்தை வசூல் செய்கின்றன.

*NBFCகள் திருமண கடனுக்கு 24 சதவீதம் வரை வட்டியை நிர்ணயித்துள்ளது.

உங்களுடைய கடன் வரலாறு, மாத வருமானம், கடன் தொகை மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கு நீங்கள் தேர்வு செய்யும் கால அவகாசம் ஆகியவை உங்களுக்கு வழங்கப்படும் இறுதி வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும்.

திருமண கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

-முதலில் நீங்கள் அடிப்படை தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். பெரும்பாலான கடன் வழங்குனர்கள் 21 முதல் 58 வயதிலான நிலையான வருமானம் மற்றும் நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட நபர்களை தேர்வு செய்கின்றனர்.

-திருமணத்திற்கு ஆகக்கூடிய செலவு எவ்வளவு என்பதை கணக்கிட்டு, அந்த கடனை உங்களால் எப்போது திருப்பி செலுத்த முடியும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

-பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்கள் மற்றும் நிபந்தனைகளை ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கான சிறந்த ஒன்றை தேர்வு செய்யுங்கள். -அடையாள ஆவணங்கள் (ஆதார் அட்டை, PAN கார்டு), முகவரி ஆவணங்கள் (யுட்டிலிட்டி பில்கள், பாஸ்போர்ட்) வருமான சான்றிதழ்கள் (சேலரி ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மென்ட்) மற்றும் வயது சான்றிதழ் (பிறப்பு சான்றிதழ்) போன்றவற்றை தயாராக வையுங்கள்.

-குறிப்பிட்ட கடன் வழங்குனரின் வெப்சைட்டில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது வங்கி அல்லது NBFC கிளைக்கு நேரடியாக சென்று கடனுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

-நீங்கள் வழங்கிய ஆவணங்கள் மற்றும் கிரெடிட் வரலாறை சரிபார்த்த பிறகு உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படும்.

-கடன் அங்கீகரிக்கப்பட்ட உடன் ஒரு சில நாட்களில் உங்களுடைய வங்கி கணக்கிற்கு நேரடியாக கடன் தொகை டிரான்ஸ்ஃபர் செய்யப்படும்.

குறைவான வட்டி விகிதத்தை பெறுவதற்கான குறிப்புகள்:-

*நல்ல கிரெடிட் ஸ்கோரை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

*கடனை திருப்பி செலுத்துவதற்கான சரியான கால அவகாசத்தை தேர்வு செய்யுங்கள்.

*பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்கள் மற்றும் கடன் நிபந்தனைகளை ஒப்பிட்டு பாருங்கள்.

*முழுமையான மற்றும் சரியான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.

*ஒருவேளை உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட ஒரு துணை விண்ணப்பதாரரை சேர்த்துக் கொள்ளவும்.

திருமண கடனுக்கு மாற்றீடுகள்:

-பர்சனல் லோன்கள்

-நகை கடன்கள்

-குடும்பம் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவது

-திருமணத்திற்கு பல மாதங்கள் முன்னரே திட்டமிட்டு அதற்கான பணத்தை சேமித்து வைத்து பயன்படுத்துவது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 26, 2025 7:45 AM IST

Read More

Previous Post

டெல்லியில் பர்தா அணிந்து சென்று இளம்பெண்ணை 5-வது மாடியில் இருந்து தள்ளி கொன்றவர் கைது | Man arrested for pushing young woman to death from 5th floor in delhi

Next Post

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்: இஸ்ரேல் குற்றச்சாட்டும், ஈரான் மறுப்பும் | Israel accuses iran violating ceasefire Iran denies

Next Post
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்: இஸ்ரேல் குற்றச்சாட்டும், ஈரான் மறுப்பும் | Israel accuses iran violating ceasefire Iran denies

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்: இஸ்ரேல் குற்றச்சாட்டும், ஈரான் மறுப்பும் | Israel accuses iran violating ceasefire Iran denies

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin