• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

"இந்தியாவில் அமெரிக்கப் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்" – அமெரிக்கா எச்சரிக்கை; பின்னணி என்ன?

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
"இந்தியாவில் அமெரிக்கப் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்" – அமெரிக்கா எச்சரிக்கை; பின்னணி என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

ஜூன் 16ம் தேதி வெளியான இந்த ஆலோசனை அறிக்கையில், இந்தியாவின் சில பகுதிகளில் குற்றங்களும் பயங்கரவாதமும் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

“பாலியல் வன்புணர்வு இந்தியாவில் வேகமாக வளரும் குற்றங்களில் ஒன்றாக இருக்கிறது. பாலியல் அத்துமீறல்களும் வன்முறையும் சுற்றுலாத் தளங்கள் மற்றும் பிற இடங்களிலும் பெருகியுள்ளன.

Violence against women
Violence against women

பயங்கரவாதிகள் சிறிய எச்சரிக்கையுடன் அல்லது திடீரென தாக்கக்கூடும். அவர்கள் சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள்/ஷாப்பிங் மால்கள், அரசு மையங்களைக் குறிவைக்கின்றனர்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆண் நண்பரை தாக்கி இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – தீர்ப்பைக் கேட்டு கதறி அழுத குற்றவாளிகள்

மேலும், “இந்தியாவின் கிராமப் புறங்களில் அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசர உதவி வழங்க அரசிடம் குறைந்த திறனே உள்ளது. கிழக்கு மகாராஷ்டிரா வடக்கு தெலுங்கானாவிலிருந்து மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகள் வரை ஆபத்தான பகுதிகள் நிறைந்திருக்கின்றன.

இந்த அபாயத்தைக் கருத்தில்கொண்டு, இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்கர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல சிறப்பு அங்கீகாரம் பெற வேண்டும்” என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Rural India
Rural India

இந்தியாவில் ஜி.பி.எஸ் சாதனங்கள் அல்லது சேட்டிலைட் போன்கள் வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும், பிடிபட்டால் 20,000 டாலர்கள் அபராதம் அல்லது சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

`பாலியல் வன்கொடுமைகள் வழக்கில் 15 நாள்களில் விசாரணையை முடிக்கும் சட்டம் வேண்டும்!’ – மோடியிடம் மம்தா

மேலும், “தனியாகப் பயணிக்காதீர்கள், குறிப்பாக நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால்…” என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமெரிக்கக் குடிமக்களுக்குத் தெரிவித்துள்ளது அந்தநாட்டு வெளியுறவுத்துறை.

குறிப்பாகப் பின்வரும் மாநிலங்களுக்குப் பயணிக்கையில் சிறப்பு அனுமதிப் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பீகார்

ஜார்கண்ட்

சத்தீஸ்கர்

மேற்கு வங்கம்

மேகாலயா

ஒடிசா

அமெரிக்கா
அமெரிக்கா

இந்த மாநிலங்களின் தலைநகரங்களுக்கு மட்டும் செல்வதாக இருந்தால் சிறப்பு அனுமதி தேவையில்லை என்கிறது அந்த அறிக்கை.

“இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்க அரசு ஊழியர்கள் மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதிக்கும் மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கும் பயணிக்க அனுமதி பெற வேண்டும்.

குடியேற்றம் தொடர்பான நெருக்கடியால் தடுப்புக்காவல் மற்றும் அபராதம் விதிக்கப்படும் அபாயம் இருப்பதால், இந்தியா-நேபாள எல்லையைத் தரைவழியாகக் கடக்க வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவற்றுடன் மணிப்பூர் செல்லவும் அனுமதி தேவை எனக் கூறியுள்ளனர்.

“உலகின் 4-வது மிகப் பெரிய பொருளாதார நாடு இந்தியா; ஜப்பானை முந்திவிட்டோம்..” – நிதி ஆயோக் CEO!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Previous Post

இந்திய அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாதது ஏன்? – முதல் டெஸ்ட் முழு அலசல் | IND vs ENG test highlights

Next Post

சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல.. பல நாட்களாகவே உள்ளது – விஜய் ஆண்டனி | Makkal Osai

Next Post
சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல.. பல நாட்களாகவே உள்ளது – விஜய் ஆண்டனி | Makkal Osai

சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல.. பல நாட்களாகவே உள்ளது - விஜய் ஆண்டனி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin