வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்ட செயலர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்ட செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். (a)


