• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழுவுடன் வெற்றிகரமாக தொடங்கியது ஆக்சியம் 4 விண்வெளிப் பயணம்! | Axiom 4 successfully launched Indian astronaut Shubhanshu Shukla flies to space

GenevaTimes by GenevaTimes
June 25, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழுவுடன் வெற்றிகரமாக தொடங்கியது ஆக்சியம் 4 விண்வெளிப் பயணம்! | Axiom 4 successfully launched Indian astronaut Shubhanshu Shukla flies to space
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புளோரிடா: இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய நேரப்படி சரியாக இன்று (ஜூன் 25) பகல் 12.01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

28 மணி நேரப் பயணம்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸின் இந்த ராக்கெட்டில் உள்ளனர். இந்த விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப் பின்னர் வியாழக்கிழமை (ஜூன் 26) மாலை 4:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆக்சியம்-4-ன் இன்றைய ஏவுதலுக்கு அனைத்து அமைப்புகளும் நன்றாக உள்ளன. ஏவுதலுக்கான வானிலையும் 90 சதவீதம் சாதகமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பலமுறை தள்ளிவைப்புக்குப் பின்னர்.. கடந்த ஜூன் 11-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஆக்சியம் 4-ன் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஜூன் 8 மற்றும் ஜூன் 10-ம் தேதிகளில் மோசமான வானிலை காரணமாக இந்த ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது. பலமுறை பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் 4ன் ஏவுதல் இன்று வெற்றிகரமாக நடந்துள்ளது.

Liftoff of Ax-4! pic.twitter.com/RHiVFVdnz3


— SpaceX (@SpaceX) June 25, 2025

சுபான்ஷு சுக்லா யார்? – அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.

இதன்​படி, அமெரிக்​கா​வின் புளோரி​டா​வில் உள்ள கென்​னடி விண்​வெளி மையத்​திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் டிராகன் விண்​கலம் ஏவப்பட உள்ளது. இந்த விண்​கலத்​தில் அமெரிக்​கா, இந்​தி​யா, போலந்து மற்​றும் ஹங்​கேரி நாடு​களைச் சேர்ந்த தலா ஒரு​வர் என 4 பேர் பயணிக்க உள்​ளனர். இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனத்​தின் (இஸ்​ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானி​யாக செயல்பட உள்ளார். இந்த விண்​கலம் 28 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடை​யும் என நாசா தெரி​வித்​துள்​ளது. இவர்கள் அங்கு 14 நாட்​கள் தங்கி இருப்​பார்​கள் எனக் கூறப்​படு​கிறது.

கடந்த 1984-ம் ஆண்டு சர்​வ​தேச விண்​வெளி நிலையத்​துக்கு சென்ற ரஷ்​யா​வின் சோயுஸ் விண்​கலத்​தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்​தார். சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு சென்ற முதல் இந்​தி​யர் என்ற பெருமை இவருக்கு கிடைத்​தது. 41 ஆண்​டு​களுக்​குப் பிறகு விண்​வெளி நிலை​யம் செல்​லும் இந்​தி​யர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்​ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோவை சேர்ந்​த சுபான்ஷு சுக்​லா, கடந்த 2006-ல் இந்​திய விமானப்​படை​யில் சேர்ந்தார். 2024-ம் ஆண்​டில் குழு கேப்​ட​னாக பொறுப்​பேற்​றார். இந்த சூழ்​நிலை​யில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோ​வின் ககன்​யான் திட்​டத்​துக்​காக சுபான்ஷு தேர்வு செய்​யப்​பட்​டார். இதற்​காக ரஷ்​யா​வின் யூரி காகரின் விண்​வெளி மையத்​தில்​ சேர்ந்​து இவர் சிறப்​புப் பயிற்​சி பெற்​றார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தாய்… இந்தியாவில் சட்டப் போராட்டம் நடத்தும் மகள்

Next Post

அணுகுண்டுகளை சுமக்கும் திறன் கொண்ட எப்-35 ஜெட் விமானங்களை வாங்க இங்கிலாந்து திட்டம் | Makkal Osai

Next Post
அணுகுண்டுகளை சுமக்கும் திறன் கொண்ட எப்-35 ஜெட் விமானங்களை வாங்க இங்கிலாந்து திட்டம் | Makkal Osai

அணுகுண்டுகளை சுமக்கும் திறன் கொண்ட எப்-35 ஜெட் விமானங்களை வாங்க இங்கிலாந்து திட்டம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin