அதே சாலையில், பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே, அவரது பாதுகாவலா், ஓட்டுநருடன் காரில் சென்று கொண்டிருந்தாா். அனந்த்குமாா் ஹெக்டேவின் காரை சைஃப் கான் 3 முறை முந்தி சென்ாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அனந்த்குமாா் ஹெக்டே, தும்கூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா வட்டம், ஹலேநிஜகல் கிராமப் பகுதியில் சென்று கொண்டிருந்த சைஃப்கானின் காரை இடைமறித்து, அவரது பாதுகாவலா், ஓட்டுநா் இருவரும் காரை நிறுத்துமாறும், காரில் இருந்து இறங்குமாறும் அதட்டியுள்ளனா்.

