Last Updated:
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ. 2,000 கோடி மதிப்பில் 13 புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அவசர தேவையின் கீழ் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு, அவசர தேவையின் கீழ், சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 13 புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அவசர தேவையின் கீழ் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இறுதி ஒப்பந்தம் செய்துள்ளது.
அதில், டிரோனை கண்காணித்து வானிலேயே வீழ்த்தும் கட்டமைப்பு, எடை குறைவான ரேடார்கள், குறைந்த தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகள், பல்வேறு வகையான டிரோன்கள் இடம்பெற்றுள்ளன.
அதே போன்று, புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட்கள், குண்டு துளைக்காத தலைக்கவசம், இரவிலும் இலக்கை துல்லியமாக தாக்க வல்லமைக்கொண்ட துப்பாக்கிகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இவை, விரைவில் கைக்கு வரும் என கூறியுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.
June 24, 2025 8:19 PM IST
இந்திய பாதுகாப்புத் துறைக்கு ரூ. 2,000 கோடி… அவசர தேவையின் கீழ் ஆயுதங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல்


