கேரளத்தின் விமான நிலையங்களிலிருந்து அரபு நாடுகளுக்கு தினசரி பல விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் இரவு, நள்ளிரவிலேயே இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில், ஈரான் – இஸ்ரேல் சண்டை திங்கள்கிழமை(ஜூன் 23) தீவிரமடைந்ததால் அன்று மாலையிலிருந்தே மத்திய கிழக்காசிய பகுதிகளுக்கான பல விமானங்களின் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. சில விமானங்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டன. விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன.

