இஸ்ரேல், ஈரான், அமெரிக்க நாடுகளில் திடீரென அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம், இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழும் தமிழர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது என்ன ஆச்சரியம், இந்த யுத்தத்திற்கும் இவர்களுக்கும் என்னதான் சம்பந்தம்? அவர்களுக்கு ஏன் இது அதிர்ச்சியளிக்க வேண்டும் என்றால் இதுதான் உண்மைக்கு கதை. !

பல யுத்தங்களுக்கு முகம்கொடுத்து வாழ்க்கையில் பெரும் பொருளாதார சுமைகளை அனுபவித்தவர்கள் அவர்கள். எனவே மத்திய கிழக்கில் உருவான போர்ப்பதற்றம் நிச்சயமாக எரிபொருள்மீது ஆதிக்கம் செலுத்தி இலங்கையில் ஒருவேளை எரிபொருள் இல்லாமல் போய்விடும் என அவர்கள் அஞ்சியிருக்கிறார்கள். இதனால் தம்மிடம் உள்ள சேமிப்புகளை எல்லாம் பயன்படுத்தி, முடிந்தளவு எரிபொருட்களை கொள்வனவு செய்து பது க்கியும் வைத்துள்ளார்கள். சில நாட்களுக்கு முன்னர் எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் திரண்டிருந்த பல காட்சிகளும் வெளிவந்தன.

“அப்பாடா! இனி எந்தளவுக்கு போர் வெடித்தாலும் நமக்கு எரிபொருள் சிக்கல் இல்லை, தாராளமாக சேமித்துவிட்டோம்” என அவர்கள் பெருமூச்சு விட்டபோதுதான் வந்து விழுந்தது பெரும் குண்டு.

அதுதான் இன்று அறிவிக்கப்பட்ட இஸ்ரேல், ஈரான், அமெரிக்க போர்நிறுத்த ஒப்பந்தம்.! ஐய்யய்யோ ரொம்ப அவசரப்பட்டுவிட்டோமோ, இப்போது வாங்கிய எரிபொருட்களை எப்படி விற்பது, இதற்காகவா வரிசையில் காத்து கிடந்தது கஸ்ரப்பட்டோம், இது என்ன சோதனை என இப்போது அங்குள்ள மக்கள் புலம்பும் பல காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ரெண்ட் ஆகி வருகின்றன.



