நொவினாவில் உள்ள யுனைடெட் ஸ்கொயர் (United Square) ஷாப்பிங் மாலில் இன்று (ஜூன் 24) 21 வயதுமிக்க இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது
இன்று காலை கிட்டத்தட்ட 6.50 மணியளவில் 101 தாம்சன் சாலையில் உதவி வேண்டி வந்த அழைப்புக்கு பதிலளித்ததாக சிங்கப்பூர் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஆகியவை கூட்டாக கூறின, இது அந்த மாலின் முகவரியாகும்.
இந்நிலையில், துணை மருத்துவர்கள் அவர் இறந்ததை சம்பவ இடத்திலேயே உறுதி செய்து அறிவித்தனர் என்று SCDF தெரிவித்துள்ளது.
இந்த மரணம் இயற்கைக்கு மாறாக நடந்தது என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இளைஞர் டாக்ஸி ஸ்டாண்ட் அருகே அசையாமல் கிடந்ததாகக் காவல்துறையினர் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் அந்த இடம் காவல்துறை கட்டுப்பாட்டில் இருப்பதை காட்டுகின்றன. குறைந்தது அங்கு நான்கு காவல் கார்களும், குற்றச் சம்பவ விசாரணை வாகனமும் இருந்தன.
மாலின் கார் நிறுத்துமிடம் அருகே ஒரு நீல நிற கூடாரத்தையும் காண முடிந்தது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் சதிச்செயல் குறித்து சந்தேகிக்கவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர்.
தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

