இதையடுத்து, சென்னையில் நேற்று (ஜூன் 23) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,840-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்து ரூ.9,230க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று (ஜூன் 24) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

