Last Updated:
இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம் அடைந்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அந்நாட்டு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இன்று ஏற்படுத்தியுள்ளார் ரிஷப் பந்த்.
இந்திய பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது லண்டன் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
அதனால் 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
கேப்டன் சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். சாய் சுதர்சன் 30 ரன்களும், ஜெய்ஸ்வால் 4 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். முதல் இன்னிங்சில் 134 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் பந்த். சர்வதேச அளவில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பராக இருந்த ஆண்டு 2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.
அவருக்கு பின்னர் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடிக்கும் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் மாறி உள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ரன்கள் குவித்து வருகிறது. இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம் அடைந்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
June 23, 2025 9:31 PM IST


