ஒவ்வொரு மாதமும் உங்களுடைய கிரெடிட் லிமிட்டை முழுமையாக பயன்படுத்துவதால் மோசமான பொருளாதாரப் பிரச்சினைகள் வரலாம் என்பது பல கார்டு ஹோல்டர்களுக்குத் தெரிவது இல்லை. எனவே, உங்களுடைய பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் கிரெடிட் கார்டை முறையாக எப்படி பயன்படுத்துவது என்பதற்கான சில குறிப்புகளை இப்போது பார்ப்போம்.
மேலும், கிரெடிட் லிமிட்டை முழுமையாக பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சில பொருளாதார சிக்கல்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். கிரெடிட் லிமிட்டை முழுமையாக பயன்படுத்துவதால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம்
உங்களுடைய கிரெடிட் பயன்பாட்டு விகிதம் அதிகமாக இருந்தால், அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கும். எனவே, கிரெடிட் பயன்பாட்டு விகிதம் 30 சதவீதத்திற்கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை 1 லட்சம் லிமிட் கொண்ட ஒரு கார்டை நீங்கள் வைத்திருந்து, வழக்கமான முறையில் ஒவ்வொரு மாதமும் 90,000 ரூபாயை நீங்கள் செலவு செய்துவந்தால் உங்களுடைய பயன்பாட்டு விகிதம் 90 சதவீதமாக இருக்கும்.
இது நீங்கள் அதிகமாகக் கடனைச் சார்ந்திருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தி, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் இதனால் குறையலாம். மேலும், குறைவான கிரெடிட் ஸ்கோர் காரணமாக உங்களுடைய கடன்கள் அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கலாம்
உங்களுடைய முழு நிலுவையில் உள்ள பேலன்ஸ் தொகையையும் நீங்கள் செலுத்தாவிட்டால் மீதம் இருக்கக்கூடிய செலுத்த வேண்டிய தொகைக்கான வட்டியானது தொடர்ந்து கணக்கிடப்படும். எனவே, கிரெடிட் கார்டை நீங்கள் அதிகபட்சமாக பயன்படுத்தும்போது முழுமையான பேலன்ஸை செலுத்துவதற்கு சிரமப்படுவீர்கள். இதனால் ஒவ்வொரு மாதமும் வட்டித் தொகையானது அதிகரித்துக்கொண்டே போகும்.
எமர்ஜென்சி தேவைகளுக்கு கார்டை பயன்படுத்த முடியாமல் போகலாம்: கிரெடிட் கார்டை பயன்படுத்தி அதிகபட்ச தொகையை நீங்கள் பயன்படுத்திவிடும்போது, ஒரு மருத்துவத் தேவை அல்லது வேறு ஏதேனும் அவசரப் பணத் தேவைக்குக்கூட உங்களால் கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.
கடன் அங்கீகரிக்கப்படுவதில் சிக்கல் வரலாம்
ஹோம் லோன், கார் லோன் அல்லது வேறு கிரெடிட் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது உங்களுடைய கடன்-வருமான விகிதம் மற்றும் ஏற்கனவே இருக்கும் கடன்களை கடன் வழங்குநர்கள் மதிப்பீடு செய்வார்கள். எனவே, அடிக்கடி நீங்கள் கிரெடிட் கார்டு லிமிட்டை முழுமையாக பயன்படுத்துகிறீர்கள் என்பது தெரிந்தால் உங்களுடைய கடன் விண்ணப்பம் ரிஜெக்ட் செய்யப்படலாம்.
கிரெடிட் கார்டு லிமிட் குறைக்கப்பட வாய்ப்பு
வழக்கமான முறையில் உங்களுடைய கிரெடிட் கார்டை நீங்கள் முழுமையாக பயன்படுத்தி, சில சமயங்களில் பேமென்ட்களைச் செலுத்தத் தவறும்போது, உங்களுடைய கிரெடிட் லிமிட்டை கிரெடிட் கார்டு வழங்குநர்கள் குறைக்கலாம். எனவே, எப்போதும் உங்களுடைய செலவுகளை கண்காணிப்பது அவசியம். அத்தியாவசியமற்ற செலவுகளுக்கு கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
உங்களால் என்ன செய்ய முடியும்?
- உங்களுடைய பயன்பாட்டு விகிதத்தை குறைவாக வைப்பதற்கு பில்லிங் சைக்கிளின்போது பல்வேறு முறை பேமென்ட்களைச் செலுத்திவிடுங்கள்.
- உங்களுடைய வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிப்பதற்கு ஒரே ஒரு கார்டில் தொடர்ந்து செலவுகளைச் செய்வதற்குப் பதிலாக செலவுகளைப் பிரித்துச் செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.
- எதிர்பாராத செலவுகளுக்கு கிரெடிட் கார்டுகளை நம்புவதற்குப் பதிலாக எமர்ஜென்சி ஃபண்டை அமைப்பது உங்களுக்கு உதவும்.
எப்போதாவது கிரெடிட் கார்டை முழுமையாகப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஆனால், இதையே ஒரு பழக்கமாகக் கொண்டிருப்பது உங்களுடைய கடன் சார்ந்த நம்பகத்தன்மையை பாதிக்கலாம். நாளடைவில் நீங்கள் அதிக பணத்தை வட்டிக்காக செலவு செய்ய நேரிடலாம். எனவே, எப்போதும் உங்களுடைய கார்டை எச்சரிக்கையாக, ஒழுக்கமாகப் பயன்படுத்துவதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
June 23, 2025 8:24 PM IST
அடிக்கடி கிரெடிட் கார்டு லிமிட்டை முழுமையாக பயன்படுத்துறீங்களா…? என்னென்ன ரிஸ்க் இருக்கு தெரியுமா…?

