Last Updated:
Tomato Price| 30 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி 400 ரூபாய்க்கு வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.
விழுப்புரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழையின் காரணமாக கொள்முதல் செய்யப்படும் தக்காளியில் அதிக அளவில் பூச்சி தாக்குதல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் தக்காளி விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 10 முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பல இடங்களில், ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது. மேலும், கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி விலை குறைந்துள்ளது. பொதுவாக, தக்காளி விலை பருவமழை மற்றும் அறுவடையைப் பொறுத்து மாறுபடும். தற்போது தமிழகத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக பல பகுதிகளில் தக்காளியின் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனால் தக்காளியின் விலை குறைந்து காணப்படுகிறது. கடந்த வாரம் 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மழை பெய்து வருவதால் கொள்முதல் செய்யப்படும் தக்காளியில் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது எனவும் மழை இல்லாமல் இருந்தால் மட்டும் தான் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா பகுதியில் இருந்து தான் தக்காளியை கொள்முதல் செய்து வருவதாக விழுப்புரம் சந்தை விவசாயிகள் தெரிவித்தனர். 30 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி 400 ரூபாய்க்கு வாங்குவதாக வியாபாரிகள் கூறினர். பின்வரும் காலங்களில் மழை நீடித்தால் தக்காளியின் விலை குறைந்தே காணப்படும் எனவும் விழுப்புரம் வியாபாரிகள் தெரிவித்தனர்.
June 23, 2025 5:28 PM IST

